ஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் தினம் கொண்டாட்டம்

பதிவு செய்த நாள் : 04 ஆகஸ்ட் 2018 01:03


திருநெல்வேலி,:

ஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு குறிப்பிட்ட சில ஜவுளி ரகங்களுக்கு 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டன.

ஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தின் சார்பில் ஹம்ச தமயந்தி, ஐஸ்வர்ய பூக்கள் ஆகிய இரு பட்டுப்புடவைகள் பாரம்பரியத்துடனும், நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த பட்டுப்புடவைகளுக்கு கடந்த 2001ம் ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிப்பதாக ஆரெம்கேவி நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

ஜனாதிபதி விருது வழங்கப்பட்ட நாளை வாடிக்கையாளர்கள் தினமாக ஆண்டு தோறும் ஆரெம்கேவி நிறுவனத்தினர் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம் ஜவுளி எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பிட்ட ரகங்களுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 17வது ஆண்டாக நேற்று ஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டனர்.

70 சதவீதம் தள்ளுபடி:

வாடிக்கையாளர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஜவுளி எடுக்க குவிந்தனர். பட்டுச்சேலை, சுடிதார், சுடிதார் மெட்டீரியல்ஸ், பேன்ட், சர்ட் என குறிப்பிட்ட சில ரகங்களுக்கு 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டன.

இதுகுறித்து ஆரெம்கேவி நிறுவனத்தின் பங்குதாரர் மாணிக்கவாசகம் கூறுகையில்,‘‘எங்களது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் வாடிக்கையாளர்கள். அதனால் தான் ஜனாதிபதி விருதுக்கு பெற்ற நாளை வாடிக்கையாளர்கள் தினமாக நாங்கள் கொண்டாடுகிறோம். தொடர்ந்து அளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.’’ என்றார்.