ரயில் பயணிகளுக்கு கோச்சுக்கு செல்ல பேட்ரிக் கார் :நாகர்கோவிலில் அறிமுகம்

பதிவு செய்த நாள் : 04 ஆகஸ்ட் 2018 00:45


நாகர்கோவில்:

நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பேட்ரிக் கார் மூலம் பயணிகள் கோச்சுக்கு செல்லலாம். இதனால் நடந்து செல்ல தேவையில்லை.

இந்திய ரயில்வேயில் மாற்றங்களை அதிக அளவில் பயணிகளின் வசதிக்கு ஏற்றார் போல்  கொண்டு வரப்படுகிறது. இதனால் பயணிகள் மத்தியில் ரயில் பயணம் மீது அதிக நம்பிக்கையும் உருவாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பயணிகளின் டிக்கெட்டில் மாநில மொழிகள் இடம் பெற்றது. குமரி மாவட்டத்தில்  வழங்கப்படும் ரயில் டிக்கெட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. இது பயணிகள் மத்தியில் ஆதரவை பெற்றது. அதேபோல் தற்போது மாற்று திறனாளிகள், முதியோர்கள், பயணிகள் செல்ல பேட்ரிக் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த காரில் ஒரு நபருக்கு கட்டணம் 40 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் மெயில் பிளாட்டில் இருந்து தங்கள் செல்லும் கோச்சை வரை சுலபமாக சென்று விடலாம்.  பயணிகளின் கையில் உள்ள லக்கேஜ் மட்டுமே பேட்ரிக் காரில் கொண்டு செல்ல முடியும். பிற லக்கேஜ்களுக்கு அனுமதியில்லை. நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தற்போது 2 பேட்ரிக் கார்கள் செயல்பட துவங்கியுள்ளது. இது ரயில் பயணிகளுக்கு சுலபமாகவே இருக்கும். அதே நேரத்தில் பணம் மட்டும் தேவை என பயணிகள் தெரிவித்தனர்.