சட்­ட­மன்ற நட­வ­டிக்­கை­களை பொறுத்­த­வரை, பேரவை தலை­வ­ரின் முடிவே இறு­தி­யா­னது

பதிவு செய்த நாள் : 24 ஜூலை 2018 00:54


கோவில்­பட்டி:

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க பிரச்­னை­யில் சட்­ட­மன்ற நட­வ­டிக்­கை­களை பொறுத்­த­வரை, பேர­வைத் தலை­வ­ரின் முடிவே இறு­தி­யா­னது என புதிய தமி­ழ­கம் கட்சி நிறு­வன தலை­வர் கிருஷ்­ண­சாமி கூறி­னார்.

 நெல்லை மாவட்­டத்­தில் உயிர் நீத்த 17 மாஞ்­சோலை தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு வீர­வ­ணக்­கம் செலுத்த சென்ற புதிய தமி­ழ­கம் கட்சி நிறு­வன தலை­வர் கிருஷ்­ண­சா­மிக்கு கோவில்­பட்­டி­யில் வடக்கு மாவட்ட செய­லா­ளர் அன்­பு­ராஜ் தலை­மை­யில், மாவட்ட ஒருங்­கி­ணைப்­பா­ளர் மன்­சூர் அலி முன்­னி­லை­யில் வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

வர­வேற்பு நிகழ்ச்­சிக்­குப் பிற­கு ­கி­ருஷ்­ண­சாமி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் கூறி­ய­தா­வது:

  தமி­ழ­கத்­தில் சுமார் 5 மாவட்­டங்­க­ளில் 5 லட்­சத்­துக்கு மேற்­பட்ட தேயிலை தோட்ட தொழி­லா­ளர்­கள் உள்­ள­னர். தோட்ட தொழி­லா­ளர்­க­ளின் உரி­மை­களை மீட்­டெ­டுக்க தமி­ழக அரசு அனைத்து வித­மான நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுக்க வேண்­டும்.

தகுதி நீக்­கம் செய்­யப்­பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்­கில் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­கள் எப்­படி இருக்­கும் என யூகிக்க முடி­யாது. சட்­ட­மன்ற நட­வ­டிக்­கை­களை பொறுத்­த­வரை, பேரவை தலை­வ­ரின் முடிவே இறு­தி­யா­னது.

 இந்­திய ஜன­நா­ய­கத்தை பொறுத்­த­வரை இது­தான் முறை. கடந்த ஓராண்டு கால­மாக ஒரு­முக வரி என்­ற­ழைக்க கூடிய ஜி.எஸ்.டி. வரி விதிப்­புக்கு பின்­னர் பல பாதிப்பு இருப்­ப­தாக வணி­கர்­கள், பொது­மக்­கள் மத்­தி­யில் கருத்­து­கள் வந்­தி­ருக்­கி­றது.

அதன் அடிப்­ப­டை­யில், இரண்டு, மூன்று முறை மத்­திய அரசு ஜி.எஸ்.டி. வரி விகி­தா­சா­ரத்தை குறைத்­துள்­ளது வர­வேற்­க­தக்­கது.ஒட்­டு­மொத்­த­மாக இந்­தியா முழு­வ­தும் ஒரே வித­மான வரி என்­பது கொள்கை அள­வில் மிக­வும் வர­வேற்­க­த­குந்த செயல்.

  , 18 சத­வீ­தம், 28 சத­வீ­தம் என இன்­னும் சில பொருட்­க­ளுக்கு வரி வேறு­பாடு உள்­ளது. இதனை 4 சத­வீ­தம், 12 சத­வீ­தம் என   கொண்டு வந்­தால் அனைத்து தரப்பு மக்­க­ளும் வர­வேற்­கும் சூழல் உரு­வா­கும்.

தீப்­பெட்டி, பட்­டாசு, நெசவு மற்­றும் திருப்­பூர், கரூர் போன்ற பகு­தி­க­ளில் உள்ள வேலைக்கு கூலி என்­ப­தற்கு (ஜாம் ஓர்க்ஸ்) 4 சத­வீத வரி விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை குறைக்க வேண்­டும்   என்­றார்.

 நிகழ்ச்­சி­யில், தெற்கு மாவட்ட செய­லா­ளர் குபேந்­தி­ர­பாண்­டி­யன், மாவட்ட இளை­ஞ­ரணி செய­லா­ளர் கிரி­பாலா , கோவில்­பட்டி கிழக்கு, மேற்கு, ஒன்­றிய செய­லா­ளர் வேல்­மு­ரு­கன், ஒன்­றிய துணை செய­லா­ளர் குரு­பா­தம், ஒன்­றிய விவ­சாய அணி செய­லா­ளர் பேச்சு முத்து, விளாத்­தி­கு­ளம் வடக்கு ஒன்­றிய செய­லா­ளர் உமை­ய­ண­பாண்­டி­யன், கயத்­தார் ஒன்­றிய செய­லா­ளர் முரு­கையா, மாவட்ட மாண­வ­ரணி செய­லா­ளர் தங்க மாரி மற்­றும் கிளை செய­லா­ளர்­கள் மக­ளீர் அணி­யி­னர் உட்­பட ஏரா­ள­மா­ன­வர்­கள் கலந்து கொண்­ட­னர்.