வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா:அமைச்சர்கள், அரசியல்கட்சி பிரமுகர்கள் மரியாதை

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2018 00:44


கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் நடந்த வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலைக்கு சர்வ கட்சியினர், பல்வேறுஅமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் 308வது பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி கட்டாலங்குளம் அருகே உள்ள சரவணாபுரத்தில் இருந்து கிராம மக்கள் 108 பால்குடம் எடுத்து வீரன் அழகுமுத்துக்கோனின் இல்லத்துக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மணிமண்டபத்துக்கு வந்து அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

தமிழக அரசின் சார்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 308-வது பிறந்த நாள் விழா, கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.. விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர். ராஜூ கலந்து கொண்டு  அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது வீரன்  அழகுமுத்துக்கோன் ஒரு சாதியுடைய தலைவர் அல்ல. இந்திய சேதத்தின் விடுதலை போராட்ட தலைவர், என்றார்

எம்.எல்.ஏ. கீதா ஜீவன் வீரன்அழகுமுத்துகோனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

  அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர்  தினகரன் எம்எல்ஏ  தனது ஆதரவாளர்களுடன் வந்து,  மணிமண்டபத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், எம்.பி. சசிகலா புஷ்பா, உட்பட பலர் கலந்து கொண்டனர்,