பாளை., யில் மாம்­ப­ழச்­சங்­கப் பண்­டி­கை

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2018 00:35


திரு­நெல்­வேலி,:

பாளை., நூற்­றாண்டு மண்­ட­பத்தில் மாம்­ப­­ழச்­சங்கப் பண்­டி­கையில் கிறிஸ்­தவ மக்கள் திர­ளா­கப் பங்­கேற்­ற­னர். 

டி.டி.டி.ஏ., நெல்லை திரு­மண்­டலம் சார்பில் மாம்­பழச் சங்கம் மற்றும் 238 வது வரு­டாந்­திர தோத்­திரப் பண்­டிகை பாளை., நூற்­றாண்டு மண்­ட­பத்தில் நேற்றுமுன்­தி­னம் துவங்­கி­யது. நேற்று மாம்­ப­ழச்­சங்கப் பண்­டிகை நட­ந்தது. தூத்­துக்­குடி – நாசரேத் திரு­மண்­டல பிஷப் ஜெபச்­சந்­திரன், எம்.பி., விஜிலா சத்­தியானந்த் தலைமை வகித்­தனர். திரு­­மண்­டல நிர்­வா­கி­கள, சபை நிர்­வா­கிகள், குரு­மார்கள் கலந்து கொண்­டனர். கிறிஸ்­தவ மக்கள் திர­ளாகக் கலந்து கொண்டு ஏழை மக்­க­ளுக்கு அரிசி, பணம் தர்மம் வழங்­கி­னர். இன்று காலை 9 மணிக்கு பாளை., தூய திரித்­துவ பேரா­ல­யத்தில் தோத்­திரப் பண்­டிகை நடக்­கி­ற­து.

இரு தரப்­பி­னர் வாக்­கு­வா­தம்

மாம்­ப­­ழச்சங்கப் பண்­டி­கையை முன்­னிட்டு தர்மம் பெறு­வ­தற்கு ஆண்­டு­தோறும் நூற்­றாண்டு மண்­டபம் முன்பு ஆத­ர­வற்ற மக்கள் திரள்வர். இவர்கள் நேருஜி சிறுவர் கலை­ய­ரங்­கில் அமர்ந்து தர்மம் பெறுவர். நேற்று தர்மம் பெற மக்கள் அங்கு அமர்ந்த போது அரங்கிற்கு மற்­றொ­ரு தரப்­பினர் வந்­தனர். தாங்கள் அரங்கை வாட­கைக்கு எடுத்­துள்­ளதால் மற்­ற­வர்­களை உள்ளே அனு­ம­திக்­கக்­கூ­டாது என அவர்கள் கூறினர். இரு தரப்­புக்கும் இடையே வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. போலீசார் இரு தரப்­பி­ன­ரி­டமும் பேச்­சு­வார்த்தை நடத்­தினர். பின்னர் சுமூக நிலை ஏற்­பட்­ட­து.