100 நாள் வேலை கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை :போலீஸ் குவிப்புால் பரபரப்பு

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2018 00:49

நாகர்கோவில்,:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாள்  வேலை கேட்டு மனுவுடன்  கலெக்டர் அலுவலகத்ததை சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாள் வேலை கேட்டு நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மழையில் நனைந்தபடி கையில் மனுவுடன் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தவிர அதிரடி படை மற்றும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி தலைமையில் மாவட்ட தலைவர் கண்ணன், மாநில தலைவர் லாசர், முன்னாள் எம்.பி., பெல்லார்மின் உள்பட பலர் கலந்து கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் திடீரென கோஷங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு அதிகரித்தது. டி.எஸ்.பி., இளங்கோவன், ஏ.டி.எஸ்.பி., விஜயபாஸ்கரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலெக்டர் அலுவலகம் வந்து போராட்ட காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்கு போராட்டகாரர்கள் வேலைக்கு உத்தரவாதம் தந்தால் மட்டுமே இடத்தைவிட்டு வெளியேறுவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பிடிவாதமாக இருந்தனர். இதனால் பேச்சுவார்த்தை நீடித்த நிலையில் போராட்ட தலைவர்ளை அழைத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். மனுக்களை  தனித்தனியாக அதிகாரிகள் பெற்றனர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.