15 கிரா­மங்­க­ளில் குடி­நீர் வடி­கால் வாரி­யம் மூலம் உடனே செயல்­ப­டுத்த அனு­மதி

பதிவு செய்த நாள் : 10 ஜூலை 2018 02:21


துாத்­துக்­குடி:

துாத்­துக்­குடி ஸ்டெர்­லைட்டை சுற்­றி­யுள்ள 15 கிரா­மங்­க­ளுக்கு குடி­நீர் வடி­கால் வாரி­யத்­தின் சிறப்பு திட்­டம் மூல­மாக 8 கோடி­யில் குடி­நீர் மேம்­பாட்டு பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்.

ஸ்டெர்­லைட் ஆலைக்­குள்­ளும், சுற்­றி­யுள்ள பகு­தி­யில் உள்ள செடி­களை பாது­காக்க உயர்­மட்ட குழு பரிந்­து­ரைப்­படி மாந­க­ராட்சி மற்­றும் குடி­நீர் வடி­கால் வாரி­யம் மூலம் தண்­ணீர் வழங்­கப்­ப­டும் என்று கலெக்­டர் சந்­தீப் நந்­துாரி தெரி­வித்­தார்.

துாத்­துக்­குடி கலெக்­டர் அலு­வ­ல­கத்­தில் நேற்று மக்­கள் குறை­தீர்க்­கும் நாள் கூட்­டம் கலெக்­டர் சந்­தீப் நந்­துாரி தலை­மை­யில் நடந்­தது. டி.ஆர்.ஓ., டாக்­டர் வீரப்­பன், கலெக்­ட­ரின் நேர்­முக உத­வி­யா­ளர் (பொது) தியா­க­ரா­ஜன், சமூக பாது­காப்பு திட்ட தனி துணை ஆட்­சி­யர் சங்­க­ர­நா­ரா­ய­ணன் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.

கோவில்­பட்டி தாலுகா இனாம் மணி­யாச்சி கிரா­மத்தை சேர்ந்த ஜெக­நா­தன் விபத்­தில் இறந்­தார். அவ­ரது மனைவி பத்­மா­வதி ஒரு லட்­சத்­திற்­கான காசோலை, திருச்­செந்­துார் தாலுகா கீர­னுார் கிராம பகு­தியை முரு­கே­சன் என்­ப­வர் மின்­சா­ரம் தாக்கி இறந்­தார்.

அவ­ரது மனைவி உமை­யாள் பார்­வ­திக்கு 3 லட்­சத்­திற்­கான காசோலை, எட்­ட­ய­பு­ரம் தாலுகா கீழ­ஈ­ரால் அரு­ணா­ச­ல­பு­ரத்தை சேர்ந்த ரத்­தி­னம்­மாள் மகன் சூர்யா, செல்­வ­மணி மகன் சேர்­ம­துரை ஆகிய இரண்டு பள்ளி மாண­வர்­கள் பள்ளி வளா­கத்­தில் உள்ள கிணற்­றில் மூழ்கி இறந்­த­னர்.

இறந்­த­வ­ரின் குடும்­பத்­திற்கு 50 ஆயி­ரம் மற்­றும் 25 ஆயி­ரத்­திற்­கான காசோ­லையை கலெக்­டர் சந்­தீப் நந்­துாரி வழங்­கி­னார். மொத்­தம் 4 நபர்­க­ளின் குடும்­பத்­திற்கு முதல்­வர் நிவா­ரண நிதி­யில் இருந்து 5 லட்­சத்­திற்­கான காசோ­லை­யை­யும், கோமதி என்­ப­வ­ருக்கு விதவை உத­வித்­தொகை உத்­த­ர­வை­யும் கலெக்­டர் வழங்­கி­னார்.

ஸ்டெர்­லைட் பணி­யா­ள­ருக்கு கலெக்­டர் அலு­வ­ல­கத்­தில் கவுண்­டர்

ஸ்டெர்­லைட் ஆலை மூடப்­பட்டு விட்­ட­தால் அதில் உள்ள பணி­யா­ளர்­க­ளுக்கு மாற்­றுப்­பணி வழங்க அரசு உத்­த­ர­வுப்­படி மாவட்ட நிர்­வா­கம் ஏற்­பாடு செய்­தது. இதற்­காக தனி­யாக இணை­ய­த­ளம், இணை­ய­த­ளம் வச­தியை பயன்­ப­டுத்த முடி­யா­த­வர்­க­ளுக்கு கலெக்­டர் அலு­வ­ல­கத்­தில் தனி கவுண்­டர் திறக்­கப்­பட்­டுள்­ளது.

ஸ்டெர்­லைட்­டில் பணி­யாற்­றி­ய­வர்­கள் மாற்று கம்­பெ­னி­க­ளில் பணி செய்ய இணை­ய­த­ளம் மூலம் 120பேர் வேலை கேட்டு தங்­க­ளது விப­ரங்­களை சமர்­பித்­துள்­ள­னர். துாத்­துக்­குடி மாவட்­டத்­தில் மொத்­தம் ௩௦௦ தனி­யார் தொழில் நிறு­வ­னங்­கள் செயல்­பட்டு வரு­கி­றது. இந்த கம்­பெ­னி­க­ளில் ௧௦௦ தொழில் நிறு­வ­னங்­களை அழைத்து மாவட்ட நிர்­வா­கம் சார்­பில் சம்­பந்­தப்­பட்ட துறை அதி­கா­ரி­கள் முன்­னி­லை­யில் பேச்­சு­வார்த்தை நடத்தி அவற்­றில் உள்ள வேலை­வாய்ப்­பு­கள் குறித்து விப­ரம் கேட்­டோம். மற்ற தொழில் நிறு­வ­னங்­க­ளை­யும் அழைத்து பேச உள்­ளோம்.

இதில் 25தொழில் நிறு­வ­னங்­க­ளில் எலக்­டி­ரி­சன், ஹெல்­பர் உள்­ளிட்ட பல்­வேறு பணி­யி­டங்­க­ளுக்கு 150 பேர் தேவை என்று தெரி­வித்­த­னர். இதனை ஸ்டெர்­லைட்­டில் வேலை இழந்­தோர், மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளும் பயன்­ப­டுத்தி கொள்­ள­லாம்.

600 லோடு ஜிப்­சம் சென்­றது

ஸ்டெர்­லைட் ஆலை­யில் இருந்து 1500 மெட்­ரிக் டன் சல்­பி­யூ­ரிக் ஆசிட், 100 மெட்­ரிக் டன் பாஸ்­போ­ரிக் அமி­லம், 600 லோடு ஜிப்­சம் போன்­றவை வெ ளியில் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

 எல்.பி.ஜி., காஸ், ஹைபர் டீசல் போன்­ற­வற்றை ஐ.ஓ.சி மற்­றும் பி.பி.சி நிறு­வ­னம் திரும்ப பெற்று கொள்ள வலி­யு­றுத்­தி­னோம். ஆனால் திரும்ப பெறு­வது என்­பது தங்­கள் கொள்கை இல்லை என்று தற்­போது தக­வல் தெரி­வித்து விட்­ட­னர். இத­னால் அவர்­கள் வேறு தொழிற்­சா­லைக்கு இதனை வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யு­மாறு தெரி­வித்­துள்­ளோம்.