குற்றால சீசன் நிலவரம்

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 11:47


குற்றாலம், :

குற்றாலத்தில் நேற்று முழுவதும் சாரல் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

குற்றாலத்தில் நேற்று சீசன் குளுமையான காற்றுடன் காணப்பட்ட வண்ணம் இருந்தது. வெயிலின் தாக்கம் காலையில் சற்று அதிகமாக இருந்த போதிலும் அவ்வப்போது கருமேகக்கூட்டங்களுடன் காற்று வீசிய வண்ணம் இருந்தது. மெயினருவி, ஐந்தருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் சுமாராகவே காணப்பட்டது. 

குற்றாலத்தில் கடந்த இரு நாட்களாக அருவிகளில் குளியலை அனுபவிக்க இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.