திருச்செந்துார் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின் மீன்

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2018 01:19


திருச்­செந்­துார்:

திருச்­செந்­துார் கோயில் கடற்­க­ரை­யில் இறந்த நிலை­யில் கரை ஒதுங்­கி­யுள்ள டால்­பின் மீனை பக்­தர்­க­ளும் பொது­மக்­க­ளும் ஆச்­ச­ரி­யத்­து­டன் பார்த்து சென்­ற­னர்.

 திருச்­செந்­துார் சுப்­பி­ர­ம­ணி­ய­சு­வாமி கோயில் கடற்­க­ரை­யின் தென்­ப­கு­தி­யில் இறந்த நிலை­யில் டால்­பின் மீன் ஒன்று கரை ஒதுங்­கி­யுள்­ளது.

 இந்த மீன் டால்­பின் இனத்தை சேர்ந்த ஓங்­கல் வகை மீன் என்று தெரி­ய­வந்­துள்­ளது. இறந்து கரை ஒதுங்­கி­யுள்ள மீனை கோயி­லுக்கு வந்­தி­ருந்த பக்­தர்­க­ளும், பொது­மக்­க­ளும் ஆச்­ச­ரி­யத்­து­டன் பார்த்து செல்­கின்­ற­னர்.

தொடர்ந்து மீன் இறந்­தது குறித்து அதி­கா­ரி­க­ளுக்கு தெரி­விக்­கப்­பட்­டது. அவர்­கள் அங்கு வந்து இறந்த மீனை புதைத்­த­னர்.