விளாத்­தி­கு­ளத்­தில் தீ விபத்து; 9 வீடு­கள் எரிந்து நாசம்

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2018 01:40


விளாத்­தி­கு­ளம்,:

விளாத்­தி­கு­ளம் சிதம்­ப­ர­ந­க­ரில் கருப்­பட்டி காய்ச்­சும் குடி­சை­யி­லி­ருந்து  ஏற்பட்ட தீயால் ஒன்­பது வீடு­கள் எரிந்து நாச­மா­யின.

விளாத்­தி­கு­ளம் வைப்­பாறு படுகை அருகே சிதம்­பர நக­ரில் சுமார் 200 க்கும் மேற்­பட்­டோர் வசித்து வரு­கின்­ற­னர். பனை­யே­ரும் தொழி­லா­ளர்­கள் இங்கு குடிசை வீடு­க­ளில் வசித்து வரு­கின்றனர். இங்கு வசிப்­போர் பனை தொழில் மற்­றும் கூலித்­தொ­ழில் செய்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் ஞானப்­பி­ர­கா­சம் மகன் ரத்­தி­னம் (65). இவர் தனது வீட்­டின் அரு­கா­மை­யில் உள்ள குடி­சை­யில் கருப்­பட்டி தயா­ரித்து சில்­ல­றை­யில் விற்­பனை செய்து வரு­கி­றார். நேற்று வழக்­கம் போல் கருப்­பட்டி தயா­ரிப்பு பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது அப்­ப­கு­தி­யில் காற்று பல­மாக வீசி­ய­தால் எதிர்­பா­ர­த­வி­த­மாக அடுப்­பி­லி­ருந்து தீப்­பொறி பறந்து குடி­சை­யில் விழுந்து தீப்­பி­டித்­தது. தீ மள­ம­ள­வென எரிய தொடங்கி அருகில் இருந்த பிற வீடு­க­ளுக்­கும் பர­வி­யது.

இதில் அப்­ப­கு­தியை சேர்ந்த அந்­தோ­ணி­யம்­மாள், பாண்டி, தங்­கம்­மாள், தங்­க­மா­ரி­யப்­பன், ஜெய­ராஜ், சால­மன்­ராஜா, பவுல்­ராஜ், ராஜ­பதி ஆகி­யோ­ரின் குடிசை வீடு­கள் தீயில் எரிந்து கரு­கின. தீவி­பத்து குறித்து தக­வ­ல­றிந்­த­தும் விளாத்­தி­கு­ளம் தீய­ணைப்பு நிலைய அலு­வ­லர்  பொன்­னையா தலை­மை­யில் தீய­ணைப்பு வீரர்­கள் சம்­பவ இடத்­துக்கு விரைந்து சென்று தண்­ணீரை பீய்ச்சி அடித்து தீ பர­வா­மல் கட்­டுப்­ப­டுத்­தி­னர்.

 தீ விபத்­தில் 8 குடி­சை­வீடுகள் மற்­றும் ஒரு ஓட்டு வீடு உட்­பட ஒன்­பது வீடு­க­ள் எரிந்து நாசமாயின்.  ரூ. 5 லட்­சம் மதிப்­பி­லான பொருட்­கள் தீயில் சாம்­ப­லா­கின. மேலும் அப்­ப­கு­தி­யி­லி­ருந்த சில மரங்­க­ளும் கரு­கின. இச்­சம்­ப­வம் தொடர்­பாக விளாத்­தி­கு­ளம் போலீ­சார்  போலீ­ஸார் வழக்கு பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.