நெல்­லையில் தர்ப்­பூ­சனி விற்­பனை 'விறு­வி­றுப்­பு'

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2018 01:02


திரு­நெல்­வேலி:

நெல்­லையில் தர்ப்­பூ­சனி விற்­பனை சூடு­பி­டித்­துள்­ள­து.

நெல்லையில் கடந்த சில நாட்­க­ளாக தலை­காட்டி வந்த மழை தற்­கா­லி­க­மாக விடை பெற்­றுள்­ள­து. வெயில்­ கொடுமை அதி­க­ரித்து வரு­வதால் மக்கள் அவ­திப்­ப­டு­கின்­றனர். வெயிலின் உக்­கி­ரத்தால் பகலில் பல ரோடு­களில் மக்கள் கூட்டம் குறை­வாகக் காணப்­ப­டு­கி­றது. காலை, மாலையில் வெயில் ஓர­ளவு குறை­வாக உள்ள போது ரோடு­களில் மக்கள் கூட்­டத்தைக் காண முடி­கி­ற­து. பழக்­க­டைகள், குளிர்­பானக் கடை­களில் கூட்­டம் அதி­க­ரித்­துள்­ள­து.

கோடை வெயில் வாட்­டி­யெ­டுப்­பதால் நெல்­லையில் தர்ப்­பூ­ச­னி, இளநீர், கரும்­­பு­ச்­சாறு, கூழ்­ வகைகள் விற்­பனை அதி­க­ரித்­துள்­ளது. தர்ப்­பூ­சனி ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது. வெளி மாவட்­டங்­களில் விளை­விக்­கப்­பட்ட தர்ப்­பூ­சனி பழங்கள் நெல்­லையில் குவிக்­கப்­பட்டு வரு­கின்­றன. ரோட்­டோர நடை­பாதைக் கடை­களில் விற்­ப­­னைக்கு வைக்­கப்­பட்­டுள்ள தர்ப்­பூ­ச­னி பழங்­களை மக்கள் வாங்­­கிச் செல்­கின்­ற­னர். தர்ப்­பூ­சனி விற்­பனை சூடு­பி­டித்­துள்­ளதால் வியா­பா­ரி­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.