பள்ளியாடி பழையப்பள்ளி திருத்தல விழா: 18ல் சர்வமத பிரார்த்தனை

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2018 00:53

பள்ளியாடி:

பள்ளியாடி பழையப்பள்ளி திருத்தலத்தில், வரும் 19ம் தேதி பிரசித்தி பெற்ற சமபந்தி விருந்து நடக்கிறது.

பள்ளியாடியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த  பழையப்பள்ளி திருத்தலம் அமைந்துள்ளது. கடந்த 250 ஆண்டுகளுக்கு மேலாக மதநல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக இத்திருத்தலம் விளங்கிவருகிறது. இங்கு இறைவனை அணையா ஜோதி வடிவில் மக்கள் வழிபட்டு வருகின்றனர் . இங்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வாழைக்குலைகள், திரி பூமாலை , எண்ணெய், மெழுகுவர்த்தி, அரிசி, தேங்காய், என அவரவர் விருப்பப்படி காணிக்கையாக வழங்கி வருகின்றனர். பழையப்பள்ளி அப்பா திருத்தலத்தில் வரும் 18ம் தேதி  மாலை மதநல்லிணக்கவிழா, சர்வமத பிரார்த்தனை, நலஉதவிகள் வழங்கல் நடக்கிறது.  19ம் தேதி பொதுமக்கள் தங்கள் ஜாதி ,மத , இன வேறுபாடுகளை களைந்து காணிக்கையாக வழங்கப்பட்ட பொருட்களை சேர்த்து சமைத்து  சமபந்திவிருந்து நடக்கிறது. இவ்விருந்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை பழையப்பள்ளி அப்பாத் திருத்தல அறக்கட்டளை தலைவர் பால்ராஜ், பொருளாளர் சுந்தர்ராஜ், பொதுசெயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்