பாம்பு கடித்து சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழந்தார்

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2018 01:58

  நாங்குநேரி:

விஜயநாராயணம் அருகே பாம்பு கடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

                 விஜயநாராயணம் அருகேயுள்ள திருமல்லாபுரத்தை சோ்ந்தவர் சுடலைக்கண்ணு மனைவி லெட்சுமி(65). சம்பவத்தன்று லெட்சுமி அருகேயுள்ள வயற்காட்டில் வேலை செய்யும்போது. இவரை பாம்பு கடித்ததாம். உடனே அருகில் இருந்தவர்கள் லெட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மூனைஞ்சிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். அங்கு லெட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மேல்சிகிச்சைக்காக பாளை., ஐக்கிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் லெட்சுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விஜயநாராயணம் போலீசில் லெட்சுமியின் மகன் முத்துக்குமரர் கொடுத்த புகரர் குறித்து விஜயநாராயணம் எஸ்.ஐ., சுப்பிரமணியன் வழக்கு பதிவுசெய்து விசாரைணை நடத்தி வருகின்றனர்.