அரசு பஸ்சில் சில்லறை தகராரில் பயணியை தாக்கிய கண்டக்டரிடம் போலீசரர் விசாரணை

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2018 01:57

 நாங்குநேரி,:

நாங்குநேரியில் அரசு பஸ்சில் சில்லறை தகராரில் பயணியை தாக்கிய கண்டக்டரிடம் போலீசரர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 நெல்லை பழையபேட்டையை சோ்ந்தவர் செல்வராஜ் மகன் அரசன்(54). இவர் நேற்று மதியம் நெல்லை புதியபஸ்டாண்டில் இருந்து நாங்குநேரிக்கு வருவதற்காக நாகர்கோயில் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் குமரிமாவட்டம் மணலிகரையை சோ்ந்த வர்கிஸ் மகன் ஜேக்கப்லெனின்(35) என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். அப்போது கண்டக்டர் அரசனிடம் டிக்கெட் கேட்டபோது. அரசன் 500 ரூபாய் கொடுத்து நாங்குநேரிக்கு டிக்கெட் கேட்டுள்ளார். டிக்கெட் கொடுத்த கண்டக்டர் மீதி சில்லறையை பின்பு தறுவதாக கூறினாராம். இதனால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்ப்பட்டதாம். பின்பு அரசுபஸ் நாங்குநேரி பழைய பஸ்டாண்ட் அருகே வரும்போது. அரசன் கண்டக்டரிடம் சில்லறை கேட்டபோது. இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கண்டக்டர் ஜேக்கப்லெனின், அரசனை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அரசுபஸ் நாங்குநேரி புதிய பஸ்டாண்டில் நிறுத்தப்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அரசனை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பஸ்சில் வந்த பயணிகளை வேறு பஸ்சில் மாற்றிவிடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தொிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாங்குநேரி எஸ்.ஐ., மாடசாமி தகராறு குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.