பள்ளமடையில் ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2018 01:55

மானுார்,:

மானுாரை அடுத்த பள்ளமடை கிராமத்தில் உள்ள  ஆபத்தான மின் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானுாரை அடுத்த பள்ளமடை கிராமம், பள்ளிவாசல் அருகே மெயின் ரோட்டில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. இந்த கம்பம் அமைந்துள்ள பகுதியில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. எந்த நேரமும் மின் கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆபத்தான மின் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.