நவக்கிரக கல்லை மறைக்கும் தொட்டியை கோயில் நிர்வாகம் அகற்றியது

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2018 01:53


புளியரை:

இலத்தூர் கோயிலில் நவக்கிரக கல்லை மறைக்கும் தொட்டியை கோயில் நிர்வாகம் அகற்றியது.

இலத்தூரில் அறம் வளர்த்த நாயகி சமேத மணல்நாத மதுநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் பக்தர்களால் சனி பரிகார ஸ்தலமாக வணங்கப்பட்டு வருகிறது. சனிப் பெயர்ச்சி விழாவினையொட்டி, கோயில் நிர்வாக அனுமதியுடன் எள், எண்ணை எரிக்க தனியாக இடம் வேண்டும் என தெரிவித்ததின் பேரில், தட்சிணாமூர்த்திக்கு முன்பாக தொட்டி கட்டி எள் எண்ணை மற்றும் தேங்காய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு மேற்கொள்ள கோயிலுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், சனிப் பெயர்ச்சி முடிந்த ஓரிரு வாரங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தொட்டி அகற்றி விடுவர். ஆனால் இந்த ஆண்டு இரண்டு மாதங்கள் ஆகியும் இன்று வரை அகற்றப்படாமல் இருந்தது. இதனால் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நவக்கிரக கல் அருகே நின்று வணங்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கோயிலில் உள்ள நவக்கிரக கல்லை மறைக்கும் தொட்டியை அகற்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பக்தர்களின் நலனை கருத்தில்கொண்டு தற்காலிகமாக அமைத்துள்ள தொட்டியை உடனே அகற்றும் பணி நடந்தது. இந்லையில் உடைந்த செங்கல், சிமெண்ட் கற்கள் அங்கேயே கிடப்பதால் பக்தர்களுக்கு இடைஞ்சலாக உள்ளது. உடனே அகற்ற பக்தர்கள் விரும்புகின்றனர்.