இலஞ்சி குமரன் கோயில் வள்ளி யானைக்கு சிறப்பான வரவேற்பு

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2018 01:51


குற்றாலம்:

யானைகள் முகாமில் பங்கேற்று வந்த இலஞ்சி குமரன் கோயில் வள்ளி யானைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழகத்தில் அறநிலையத்துறை கோயில்களில் உள்ள யானைகள் ஆண்டுதோறும் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள முகாமிற்கு அழைத்து செல்லப்படுவது உண்டு. இந்நிலையில் கடந்த ஜன.2ம் தேதி வள்ளி யானையை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து முகாம் முடிந்தததையடுத்து இலஞ்சி குமரன் கோயிலுக்கு வருகை தந்த வள்ளி யானைக்கு கோயில் செயல் அலுவலர் முருகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் இலஞ்சி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.