விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்ட 10 நாட்களில் 10 ஆடுகள் பலி.

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2018 01:50

ஆழ்வார்குறிச்சி:

கடையம் அருகே விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்ட 10 நாட்களில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி. தரமான ஆடுகள் வழங்க கோரிக்கை.

தமிழக அரசால் வழங்கப்படம் விலையில்லா ஆடுகள் திட்டம் பயனாளிகள் தேர்வு அந்தந்த கிராமங்களில் கிராமசபை கூட்டங்ளில் பரிந்துரை செய்யப்பட்டு அப்பகுதி அரசு கால்நடை துணை மருத்துவர்களால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி கடந்த 10 நாட்களுக்கு மன் கடையம் யூனியன் கடையம் பெரும்பத்து பஞ்., மேட்டூரை சேர்ந்த பயனாளிகளுக்க விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் மேட்டூரை சேர்ந்த சிம்சோன் என்பவருக்கு 3 ஆடுகளும், குமார் என்பவருக்கு 1 ஆடும், சக்தி என்பவருக்கு 2 ஆடுகளும், கலா என்பவருக்கு 2 ஆடுகளும், நட்சத்திரம்  என்பவருக்கு 1 ஆடும், ராமர்  என்பவருக்கு ஒரு ஆடும், இம்மானுவேல் என்பவருக்கு 2 ஆடுகளும் செத்துவிட்டன.

இதனால் தினமும் செத்த ஆடுகளை கடையம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வது வாடிக்கையாகிவிட்டது. எனவே இத்திட்டத்தில் வழங்கப்படும் ஆடுகள் பச்சிளம் குட்டிகளை வழங்காமல் சுமார் 1வயது மேற்பட்ட ஆடுகளை, தரமாக வழங்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.