பாளை. சாரதா கல்லுாரியில் உலக தாய்மொழி தினம்

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2018 01:49

திருநெல்வேலி:

பாளை. சாரதா கல்லுாரியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

பாளை. சாரதா மகளிர் கல்லுாரியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.  கல்லூரி நிர்வாகி பக்தானந்த சுவாமி, செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா ஆசி வழங்கினர். முதல்வர் மலர்விழி வாழ்த்தி பேசினார்.

தமிழ்த்துறை உதவிபேராசிரியை தனலெட்சுமி, தமிழ்மொழியின் மேன்மைகள் குறித்து பேசினார். மாணவிகள் காவ்யா, அன்னை சத்யா ஆகியோர் தாய் மொழியின் தொன்மை, சிறப்பு குறித்து பேசினர். மாணவி பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.