மருதங்கோடு திருச்செந்துாருருக்கு 20ல் காவடி பவனி

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2018 01:16

தக்கலை:

மருதங்கோடு பெருவழி முக்கு சாஸ்தா ஆலயத்திலிருந்து திருச்செந்தூருக்கு வேல் மற்றும் புஷ்பகாவடி வரும் 20ம்தேதி செல்கிறது.

        பூக்கடை மருதங்கோடு பாலமுருகா காவடிக்குழு, மற்றும் பொதுமக்கள் சார்பில் நடத்தும் 14வது வருட காவடி பவனி மருதங்கோடு  பெருவழி முக்கு சாஸ்தா ஆலயத்திலிருந்து  திருச்செந்தூருக்கு வரும் 20ம் தேதி புறப்படுகிறது. இதையொட்டி கடந்த 13ம் தேதி இருப்பு பூஜை நடந்தது. இதைத் தொடாந்து 6 நாட்கள் பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. 20ம் தேதி அதிகாலை 4 மணிக்கு வேல் குத்துதல் மற்றும் காவடி பவனி  மருதங்கோடு, கல்குளம் சாஸ்தாகோவில், பூக்கடை மங்கள வினாயகர் கோவில் சென்று மீண்டும் பெருவழி மூக்கு சாஸ்தா ஆலயத்தை வந்தடைகிறது. காவடி பவனியில் நந்த கிஷோர், சங்கர் குட்டி, வினிஸ், ஆகியோர் புஷ்ப காவடியையும், லவன், சதீஷ், கண்ணன், ஆஜேஷஸ்ரீகஜஷ் ஆகியோர் பறக்கும் காவடியிலும் செல்கின்றனர்.  அன்னதானம் வழங்கப்படுகிறது. பின் வேல் மற்றும் காவடி பவனி  புறப்பட்டு பூக்கடை மங்கள விநாயகர் திருக்கோவில், நெல்லுக்குற்றிப்பாறை இசக்கியம்மன் கோவில், எள்ளவிளை பூவனேஸ்வரி அம்மன் கோவில், புங்கரை பத்ரகாளியம்மன் கோவில், பருத்திக்காட்டுவிளை கண்ணப்பச்சி கோவில், கோழிப்போர்விளை, திருவிதாங்கோடு கேரளபுரம், மேட்டுக்கடை, தக்கலை வழி திருச்செந்தூர் சென்று அபிஷேகம் மற்றம் இடும்பன் பூஜை முடித்து ஊர் வந்து நிறைவடைகிறது. ஏற்பாடுகளை பூக்கடை பால முருகா காவடி குழுவினர் செய்துள்ளனர்.