ஸ்ரீவைகுண்டம்:
கங்கைகொண்டான் கோயில் கொடை விழாவில் நடந்த கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட ஒருவர் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
கடந்த 2017ம் ஆண்டு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் கோயில் கொடைவிழாவில் நடந்த கொலை வழக்கில் கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த பலவேசக்கண்ணு மகன் வள்ளிநாயகம்(27) என்பவரை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வள்ளிநாயகம் சரண் அடைந்தார்.
சரண் அடைந்த அவரை 15நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படியும், அதன்பின்பு நெல்லை ஜே.எம். 5வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் நீதிபதி முருகன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து போலீசார் வள்ளிநாயகத்தை சிறையில் அடைத்தனர்.