நெல்லை டவுன் அருகே சைக்கிள் மீது மினி பஸ் மோதல் முதியவர் பலி

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 08:06

திருநெல்வேலி:

நெல்லை டவுன் , குறுக்குத்துறை அருகே   மினி பஸ்  மோதியதில்  சைக்கிளில் சென்ற முதியவர் பரிதாபமாக பலியானார்.

நெல்லை டவுனை அடுத்த கருப்பந்துறை, இந்திரா நகரை சேர்ந்தவர் அந்தோணி முத்து(75). நெல்லை டவுனில் உள்ள சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு வேலை முடிந்து, நெல்லை டவுனில் இருந்து வீட்டிற்கு சைக்கிளில்  குறுக்குத்துறை – கருப்பந்துறை ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக  வந்த மினி பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் அந்தோணிமுத்து படுகாயமடைந்தார்.

இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆஸ்பத்தி ரிக்கு செல்லும் வழியில் அந்தோணிமுத்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புல னாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

தகவல் அறிந்த கருப்பந்துறை பகுதி மக்கள் ரோட்டில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.