மாநில சைக்கிள் போலோ சாம்பியன் போட்டி நடுக்கல்லுார் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 08:05

திருநெல்வேலி:

மாநில சைக்கிள் போலோ சாம்பியன் ஷிப் போட்டியில் நடுக்கல்லுார் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்.

நடுக்கல்லுார் அரசு பள்ளியில் மாநில சைக்கிள் போலோ சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. இதில் நடுக்கல்லுார் பள்ளி மாணவ, மாணவிகள் 9 வௌ்ளி பதக்கங்களும், ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றனர். 

சாதனை படைத்த  மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிராமா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் ஜாஸ்லின், ஜோசப் அந்தோணி மைக்கேல் முன்னிலை வகித்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பெரியதுரை, சிவக்குமார், சுடலைமணி ஆகியோரை ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.