பாளை. கொலை வழக்­கில் போலீ­சா­ரால் தேடப்­பட்­ட­வர் ஸ்ரீவை. கோர்ட்­டில் சரண்

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2018 08:21

ஸ்ரீவை­குண்­டம்:

பாளை.யில் நடந்த கொலை வழக்கு தொடர்­பாக போலீ­சா­ரால் தேடப்­பட்­டு­வந்­த­வர் ஸ்ரீவை­குண்­டம் கோர்ட்­டில் சரண் அடைந்­தார்.

கங்­கை­கொண்­டா­னைச்­சேர்ந்­த­வர் மோட்­டார் முரு­கன். ரியர் எஸ்­டேட் அதி­பர். இவர் அண்­மை­யில் கொலை செய்­யப்­பட்­டார். இது­தொ­டர்­பாக கங்­கை­கொண்­டான் பெரு­மாள் சன்­னதி தெரு­வைச் சேர்ந்த சுட­லை­முத்து மகன் மீனாட்சி சுந்­த­ரம் என்­ப­வரை போலீ­சார் தேடி வந்­த­னர்.

இந்­நி­லை­யில் மீனாட்­சி­சுந்­த­ரம் நேற்று ஸ்ரீவை­குண்­டம் ஜே.எம். கோர்ட்­டில் நீதி­பதி முரு­கன் முன்­னி­லை­யில் சரண் அடைந்­தார். அவரை வரும் 12ம் தேதி­வரை காவ­லில் வைக்­கும்­ப­டி­யும் 12ம் தேதி மீனாட்சி சுந்­த­ரத்தை நெல்லை ஜே.எம். 1வது கோர்ட்­டில் ஆஜர்­ப­டுத்­தும்­ப­டி­யும் நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.