துாத்துக்குடி:
துாத்துக்குடி அருகே கார் மோதிய விபத்தில் பாதயாத்திரை பக்தர் பரிதாபமாக இறந்தார்.
திருச்செந்துார் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் நடைபயணமாக பாதயாத்திரை செல்வது வழக்கம். இதேபோல் விருதுநகர் மாவட்ட சாத்துார் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்த பக்தர்கள் குழுவினர் பாதயாத்திரை புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் குறுக்குச்சாலை தாண்டி வாலசமுத்திரம் அருகே நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பக்தர் கூட்டத்தில் புகுந்தது.
அதில் ஓடைப்பட்டியை சேர்ந்த சோலைச்சாமி மகன் சசிகுமார்(௪௦) சம்பவயிடத்திலேயே இறந்தார். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.