பாரதியார் நினைவு தினம் சிலைக்கு கட்சியினர் மரியாதை

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 07:59


திருநெல்வேலி:

பாரதியார் ௯௬வது நினைவு தினத்தை முன்னிட்டு பா.ஜ., த.மா.கா.வினர், தாம்பிராஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜ., சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பொருளாளர் பாபு முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் கணேசமூர்த்தி, மணிகண்டன், டாக்டர் தீபா, எஸ்சி.எஸ்.டி., பிரிவு குமார், தச்சை மண்டல தலைவர் அசோக், பாளை., மண்டல தலைவர் குமரன், நெல்லை மண்டல தலைவர் வேல் ஆறுமுகம் , கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

த.மா.கா., சார்பில் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில மகளிரணி செயலாளர் கோமதிசண்முகம், மாவட்டச் செயலாளர் ஏ.பி.சரவணன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரமேஷ் செல்வன், மகளிரணி ஜான்சிராணி, ஜெரீனா, தங்கம், பிலால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிராமணர் சங்கம்

அகில பாரத பிராமணர் சங்கம் சார்பில் தேசிய தலைவர் டி.பி.குளத்துமணி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மூத்த துணைத்தலைவர் டி.ஆர்.நடராஜ ஐயர், மாவட்ட தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் ஐஸ்வர்யா கணேசன், மெடிக்கல் கண்ணன், கொட்டாரம் கணேசன், ரமணி, நவநீதன், வக்கீல் பர்வதராஜன், நிதி ஆலோசகர் விவேகானந்தன், திருவட்டார் கணேஷ், வன்னிநாத சர்மா, விஸ்வநாதன், சுந்தர்ராஜன், ராமமூர்த்தி, எஸ்.பி.ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் பாரதியார் சிலைக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. துணைத்தலைவர் ஜூபிடர் ராமசாமி, மணி ஐயர், பொருளாளர் ஐயப்பன், துணைத்தலைவர் சீனிவாசன்,  மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் (எ) வெங்கட், இளைஞரணி எஸ்.ஆர்.எஸ்.பாரதி, வெங்கட் நாராயணன், பத்மநாபன் (எ) பாபு, சுரேஷ்குமார், ஜங்ஷன் கிளை ஏ.ஜி.ராமகிருஷ்ணன், வேணு, குட்டன், பேட்டை கிளை பரமேஸ்வரன், சுப்பிரமணியன், முரளிபட்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாளை., புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவ, மாணவிகள் நெல்லையிலுள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாரதியார் படித்த இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நெல்லையிலுள்ள அவரது சிலைக்கு மாணவர்கள் மரியாதை செலுத்தியதுடன், பாரதியார் பயின்ற வகுப்பறையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தலைமை ஆசிரியர் வேல்முருகன், ஆசிரியர்கள் சொக்கலிங்கம், சிவசங்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பாரதியார் உலகப் பொதுச் சேவை நிதியம் அமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் மரியசூசை தலைமையில் பாரதியார் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.