பாளை.,யில் மாநகராட்சியை கண்டித்து சாலை மறியல் முயற்சி

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 07:58

திருநெல்வேலி:

பாளை.,யில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பாளை.,மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து பாதாள சாக்கடைக்கு செல்லும் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ரோடு மற்றும் தெருக்களில் கழிவுநீர் வெளியேறி அப்பகுதியில் தூர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இந்திய மக்கள் ஜனநாயக கட்சியின் செய்திதொடர்பாளர் ஜமால் தலைமையில் திடீரென பாளை.மார்க்கெட்டில் சாலைமறியல் செய்ய முயன்றனர். இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.