சீரு­டைப்­ப­ணி­யாளர் பணிக்­கு சான்­றிதழ் சரி­பார்ப்பு துவக்­கம்

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 07:55


திரு­நெல்­வேலி:

நெல்லையில் சீரு­டைப்­ப­ணி­யாளர் பணிக்கு தேர்வு செய்­யப்­பட்­ட­­வர்­க­ளுக்கு சான்­றி­தழ்கள் சரி­பார்க்­கும் பணி துவங்­கி­ய­து.

சீரு­டைப் பணி­யாளர் தேர்­வா­ணையம் சார்பில் போலீ­சார், சிறைக்­கா­வலர், தீய­ணைப்புப் பணி­யாளர் பணிகளுக்கு ஆட்­களை தேர்­வு செய்ய முதற்­கட்­ட­மாக எழுத்­துத்­தேர்வு நடந்­தது. எழுத்­துத்­தேர்வில் தேர்ச்சி பெற்­ற­வர்­க­ளுக்கு அடுத்­தக்­­கட்­ட­மாக, உடல்­திறன் தேர்வு நடந்­தது. உடல்­திறன் தேர்வில் தேர்ச்சி பெற்­ற­வர்­க­ளுக்கு அடுத்­தக்­கட்­ட­மாக கல்­­விச்சான்­றிதழ்கள் சரி­பார்ப்புப்­பணி நேற்று துவங்­கி­ய­து.

நெல்லை மாவட்­டப்­ப­கு­தியில் உடல்­தி­றன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 858 பேருக்கு மாவட்ட ஆயு­தப்­படை மைதா­னத்தில் சான்றிதழ்கள் சரி­பார்க்கும் பணி நடக்­கி­றது. நேற்று 576 பேருக்கு சான்­றிதழ்கள் சரி­பார்க்­கப்­பட்­டன. அனை­வரின் கைவிரல் ரேகை­களும் பதிவு செய்­யப்பட்­டன. இன்று 282 பேருக்கு சான்­றிதழ்கள் சரி­பார்க்­கும் பணி நடக்­கி­ற­து.

நெல்லை மாந­க­ரப்­ப­கு­தியில் தேர்வு செய்­யப்­பட்ட 77 பேருக்கு மாந­கர போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் சான்­றிதழ்கள் சரி­பார்க்கும் பணி நடந்­தது. இப்­ப­ணியில் அதி­கா­ரிகள் ஈடு­பட்­ட­னர். இதற்குப் பின், மருத்­துவப் பரி­சோ­தனை நடக்­க­வுள்­ளது. மருத்­துவப் பரி­சோ­தனை நிறைவு பெற்­றதும், தேர்வு செய்­யப்­படுப­வர்­க­ளுக்கு பயிற்சி துவங்­கு­கி­ற­து.