சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு பூக்கடை மார்க்கெட்டில் இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை

பிப்ரவரி 19, 2019

சென்னை:சென்னை கோயம்பேடு பூக்கடை மார்க்கெட்டில் இளம்பெண்ணை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர்.இது பற்றி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:– நேற்று அதிகாலை சென்னை, கோயம்பேடு பூ மார்க்கெட் பகுதியில் பூக்கடைக்கு எதிரில் உள்ள ரோட்டில் பெண் ஒருவர் கழுத்தை அறுக்கப்பட்டு

நடிகை யாஷிகா இறப்பில் மர்மம்: தாய் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரரப்பு புகார் மனு
பிப்ரவரி 19, 2019

சென்னை:கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட டிவி  நடிகை யாஷிகாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரது  தாய் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி, 22வது தெருவைச் சேர்ந்தவர் மேரிஷீலா மரியாராணி என்கிற யாஷிகா (வயது 21). திருப்பூரைச் சேர்ந்த இவர் டிவி தொடர்களில்

ஆள்மாறாட்டம் செய்து மோசடி: துாத்துக்குடி கோவில் நிர்வாகிகள் டிஜிபியிடம் புகார் மனு
பிப்ரவரி 19, 2019

சென்னை:துாத்துக்குடி, நாசரேத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து, ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன். அங்கு வகுத்தான்குப்பத்தில் உள்ள அருள்மிகு கட்டேரியாடும் பெருமாள் சுவாமி திருக்கோவில் தலைவராக உள்ளார். இவர் உட்பட கோவில் நிர்வாகிகள் டிஜிபியிடம்

நெல்லை, துாத்துக்குடி, குமரி உள்பட தமிழகம் முழுவதும் 122 டிஎஸ்பி, 16 ஏடிஎஸ்பி அதிரடி இடமாற்றம்
பிப்ரவரி 19, 2019

சென்னை:தமிழகத்தில் உதவிக்கமிஷனர்கள் உள்பட 122 டிஎஸ்பிக்கள், 16 ஏடிஎஸ்பிக்கள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.மே மாதம் நடக்கவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பணியில் ஒரே இடத்தில் பணியாற்றும்

பாலியல் புகாரில் ஐகோர்ட் உத்தரவின் பேரில் பெண் எஸ்பி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்
பிப்ரவரி 13, 2019

சென்னை:லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜிக்கு எதிராக புகார் அளித்த பெண் எஸ்பி ஐகோர்ட் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீஸார் முன்பு ஆஜராகி நேற்று தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.லஞ்ச ஒழிப்புத்துறையில் பணிபுரிந்து ஐஜி தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவருக்கு கீழ் அதிகாரியாக பணி புரியும் ஒரு பெண் எஸ்பி பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் வெளியானதை

சந்தியாவின் தலை கிடைக்காமல் பெருங்குடி குப்பைக்கிடங்கில் தவம் கிடக்கும் போலீசார்
பிப்ரவரி 13, 2019

சென்னை,:சந்தியாவின் தலை கிடைக்காததால் சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் போலீசார் தவம் இருந்தபடி தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை தலை சிக்கவில்லை. பெங்களூருவில் இருந்து சிறப்பு மோப்பநாயை வரவழைக்கப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.தூத்துக்குடி டூவிபுரம், 5-வது தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். சினிமா இயக்குநரான இவர் சென்னைஜாபர்கான்பேட்டை, பாரிநகர், காந்தி தெருவில்

கள்ளநோட்டு வழக்கில் தேடப்பட்ட கோல்கட்டா ஆசாமிகள் சென்னையில் கைது
பிப்ரவரி 13, 2019

சென்னை:கள்ளநோட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த கோல்கட்டா ஆசாமிகள் இருவரை சென்னையில் வைத்து கோல்கட்டா போலீசார் கைது செய்தனர்.மேற்குவங்காளத்தில் கள்ளநோட்டு, கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகமாக இருப்பது சகஜம். பாகிஸ்தானில் தயார் செய்யப்படும் கள்ளநோட்டுக்கள் பங்களாதேஷ் வழியாக மேற்குவங்கத்துக்கு வந்து அங்கிருந்து இந்தியா முழுவதும் புழக்கத்தில் விடப்படுகிறது. கள்ளநோட்டு

மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் போல நடித்து பணம் மோசடி: கமிஷனர் அலுவலகத்தில் புகார்
பிப்ரவரி 13, 2019

சென்னை:சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை எனக் கூறி அதிகாரிகள் போல் பேசி, அட்டகாசமாக நடித்து நியமன ஆணைகளை கடிதம் மூலம் அனுப்பி பலே மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வரும் நிலையில், மேலும் சில வழித்தடங்களுக்கு மெட்ரோ பணிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று

பஞ்சலோக முருகன் சிலை வழக்கில் தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி வாலிபர் கைது
பிப்ரவரி 13, 2019

சென்னை,:சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் பஞ்சலோக முருகன் சிலை பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நீண்ட

சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது: 25 பவுன் பறிமுதல்
பிப்ரவரி 12, 2019

சென்னை:சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகளை மீட்டனர்.சென்னை, திருவல்லிக்கேணி ஆதிமுத்து மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் திருவேங்கடம். சாப்ட்வேர் என்ஜினியர். கடந்த 30-ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு இவர் வெளியூர் சென்று விட்டார். வீட்டை பூட்டிய போது ஜன்னல் ஓரமாக சாவியை வைத்து விட்டு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட

மேலும் சென்னை மாவட்ட செய்திகள்