கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்

டிசம்பர் 11, 2018

திருவேங்கடம்,:திருவேங்கடம் தாலுகா அலுவலகம் முன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு திருவேங்கடம் வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் செல்வமுருகன் தலைமை வகித்தார். செயலாளர் அத்திப்பட்டி முத்துக்குமார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
டிசம்பர் 11, 2018

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்                   மாவட்ட கலெக்டர்  தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்,  நடந்தது.கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை,  பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை,  விதவைத்தொகை  உள்ளிட்ட  பல்வேறு  நலத்திட்ட  உதவிகள் கோரி  403 கோரிக்கை

தகவல் வழங்காததால் மன உளைச்சல் அரசு போக்குவரத்து துறை நஷ்டஈடு
டிசம்பர் 11, 2018

நாகர்கோவில்:நாகர்கோவில் நேசமணிநகர் டிம்பர் டெப்போ ரோடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக அதிகாரி தம்பிராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் போக்குவரத்து கழகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதில் தமிழ்நாடு மண்டலத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் கடந்த 31.1.2017 வரை பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி மற்றும் நிர்வாக பங்களிப்புத் தொகை நம்பகத்தில் செலுத்தாமல்

பள்ளி விழாவில் குத்தாட்டம்: கண்டித்த போலீசார் மீது கல்வீச்சு
டிசம்பர் 11, 2018

பளுகல்,:பளுகல் அருகே பள்ளிகூட ஆண்டு விழாவில் குத்தாட்டம் போட்ட வாலிபர்களை கண்டித்த போலீசார் மீது கல்வீசியதில் போலீஸ் ஏட்டு படுகாயமடைந்துள்ளார். இதை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் மூன்று பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.பளுகல் அருகே காரக்கோணம் பகுதியில் தனியர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் 75வது ஆண்டுவிழா கடந்த 10 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்கூடம்

சி.எஸ்.ஐ கன்னியாகுமரி பேராய மாமன்ற தேர்தல்
டிசம்பர் 11, 2018

தக்கலை:சி.எஸ்.ஐ கன்னியாகுமரி பேராய மாமன்ற தேர்தல் மும்முனை போட்டிகளுடன்  13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது.        கன்னியாகுமரி மாவட்டத்தில் 516 சி.எஸ்.ஐ ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களுக்கான தேர்தல் நடந்தது. கன்னியாகுமரி பேராய மாமன்றத்தில் ஸ்காட், நேசமணி, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி, வாரிய நிர்வாக குழு, தொழில்நுட்ப கல்வி நிர்வாக குழு,சபை பரிபாலன

ஸ்ரீமாவிட கண்டன் சாஸ்தா கோயில் மகா கும்பாபிஷேகம்: நாளை நடக்கிறது
டிசம்பர் 11, 2018

நாகர்கோவில்,:சுசீந்திரம் அருகே குறிச்சியில் ஸ்ரீமாவிட கண்டன் சாஸ்தா கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.நேற்று காலை 5.30 மணி முதல் ஆச்சார்ய வர்ணம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, பலிபூஜை, வாஸ்து புண்ணியாகம் நடந்தது. இன்று (11ம் தேதி) மூன்றாம் கால பூஜை, நவக்கிரக ஹோமம், மிருத்தியுஞ்ஜய ஹோமம், லெக் ஷ்மி நரசிம்ம ஹோமம், பிம்பசுத்தி, ரக் ஷோக்ன ஹோமம் நடக்கிறது. நாளை காலை கணபதி ஹோமம்,

மாதர் இயக்கங்கள் மாலை நேர தர்ணா
டிசம்பர் 11, 2018

தக்கலை:தக்கலையில் மனித உரிமை மீறல்களை கண்டித்து மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் மாலை நேர தர்ணா நடந்தது.         டிசம்பர் 10 மனித உரிமை தினமாகும். பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள் என்பதனை நிலை நாட்டவும், பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், மனித உரிமை ஆணையம், ஐ.நா சபை பூரண அதிகாரத்துடன் செயல்பட வேண்டும் என்பது சர்வதேச மனித உரிமை தினத்தின் கோரிக்கையாகும். இக்கோரிக்கையை

கடைகளில் வண்ண ஸ்டார்கள் விற்பனை ஜரூர்
டிசம்பர் 11, 2018

நாகர்கோவில்:கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடைகளில் குவிக்கப்பட்டு வரும் வண்ண வண்ண ஸ்டார்கள், குடில் பொருட்களால் களைகட்ட துவங்கி உள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25 ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா, குடில்கள், ஸ்டார்கள், குடில்கள் அமைக்க அலங்கார பொருட்கள், கேக் வகைகள் என பல அம்சங்களை கொண்டு கொண்டாடப்படுகிறது.

வாகன சோதனையில் 372 பேர் மீது வழக்கு
டிசம்பர் 11, 2018

நாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உட்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 372 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் போட்ட உத்தரவின்பேரில் போலீசார் பல்வேறு சோதலைகள் நடத்தி

பத்மநாப பெருமாள் சுவாமி கோயில் மார்கழி திருவிழா
டிசம்பர் 11, 2018

நாகர்கோவில்:பண்டாரக்காடு பத்மநாப பெருமாள் சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழா நாளை (12 ம் தேதி) துவங்கி 8 நாட்கள் நடக்கிறது.விழாவின் முதல் நாளான நாளை காலையில் அபிஷேகம், தீபாராதனை, மாலையில் பஜனை, இரவில் தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. 3 ம் நாள் விழா மாலையில்  திருமாலின் பெருமை ஆன்மிக உரை,  4 ம் நாள் விழா மாலையில் பகவத்கீதை பாராயணம், 5ம் நாள் மாலையில் கோலப்போட்டி, விஷ்ணு

மேலும் கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்