தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2016

தமிழ் புத்­தாண்டு மன்­மத வரு­டம் நிறை­வ­டைந்து – புதிய தமிழ் புத்­தாண்டு துன்­முகி ஆண்டு பிறக்­கி­றது. 13.04.2016 புதன்­கி­ழமை மாலை 6.30 மணிக்கு சப்­தமி திதி வளர்­பி­றை­யில் திரு­வா­திரை நட்­சத்­தி­ரம். மிதுன ராசி­யில் பிறக்­கி­றது. துன்­முகி ஆண்­டில் பிர­தான கிர­கங்­க­ளில் குரு பெயர்ச்­சி­யா­கி­றார். 13.04.2016 தொடங்கி இந்த புத்­தாண்டு 13.04.2017 வரை நீடிக்­கி­றது. புத்­தாண்­டிற்­கு­ரிய பொது­வான பலன்­களை 12 ராசி­க­ளுக்­கும் தெரிந்து கொள்­ளுங்­கள். உங்­கள் ராசி பலன்­களை கிரக சூழ்­நி­லை­களை தெரிந்து கொண்டு அதற்­கேற்ப சூழ்­நி­லையை அனு­ச­ரித்து திட்­ட­மிட்டு செயல்­ப­டுங்­கள் உத்­த­ம­மாக இருக்­கும்.

மேஷம்

இந்த புத்­தாண்டு உங்­க­ளுக்கு பொரு­ளா­தார ரீதி­யான முன்­னேற்­றங்­களை கொடுக்­கும். உங்­கள் புத்­தி­சா­லித்­த­ன­மான செயல்­பாடு பெருமை சேர்க்­கும். தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் கடி­ன­மாக இருந்­தா­லும் அதற்­கு­ரிய நற்­ப­லன்­கள் கிட்­டும். குடும்­பத்­தில் மகிழ்ச்சி – புதிய பொருள் சேர்க்கை ஆடை ஆப­ர­ணச் சேர்க்கை இருக்­கும். எதிர்­பா­ராத வர­வி­னங்­கள் இருக்­கும். அயன சயன போகம் மிகுந்­தி­ருக்­கும். குழந்­தை ­க­ளால் மகிழ்ச்சி இருந்­தா­லும் குழந்­தை­கள் சம்­பந்­தப்­பட்ட பரா­ம­ரிப்பு சிர­மங்­க­ளும் இருக்­கும். பூர்­வீக சொத்து சம்­பந்­தப்­பட்ட விஷ­யங்­க­ளில் அனு­கூ­ல­மான பலன்­கள் கிடைக்­கும். சனி, செவ்­வாய் சேர்க்கை எட்­டா­மிட சஞ்­சா­ரம் உங்­கள் தேக ஆரோக்­யத்­தில் சிர­மம் கொடுக்­கும். யாருக்­கும் ஜாமீன் பொறுப்பு ஏற்க வேண்­டாம். குடும்­பத்­தில் அவ்­வப்­போது சிறு­சிறு பிரச்­னை­கள் வரும். பொறு­மை­யு­டன் சூழ்­நி­லை­ களை அனு­ச­ரிப்­பது உத்­த­மம். குடும்ப சூழ்­நிலை முன்­னேற்­ற­மாக இருக்­கும் இந்த சூழ்­நிலை ஆகஸ்ட் மாதம் வரை இருந்­தா­லும் – ஆகஸ்ட் மாதம் வரும் குருப்­பெ­யர்ச்சி உங்­க­ளுக்கு சாத­க­மாக இல்லை – சிம்­மத்­தி­லி­ருந்து கன்னி ராசிக்கு செல்­வ­தால் குரு­வின் ஆறா­மிட ஸ்தான பலன்­கள் சிர­மம் தரும். எதிர்­பா­ராத பிரச்­னை­க­ளுக்கு கடன் வாங்கி சமா­ளிப்­பீர்­கள். வாழ்க்கை துணை சம்­பந்­தப்­பட்ட சிர­மங்­கள் வரும். இருந்­தா­லும் குரு­வின் பார்வை ராசிக்கு 10–ம் இடம், 12–ம் இடம், 2–ம் இடத்­திற்கு இருப்­ப­தால் தொழில் ரீதி­யான முன்­னேற்­ற ங்­கள் மகிழ்ச்சி தரும். அயன சயன போகம் சுபச்­செ­ல­வி ­னங்­கள் வரும். குடும்­ப த்­தில் மகிழ்ச்சி, முன்­னேற்­றம், மன­நிம்­மதி தரும். கொடுக்­கல் வாங்­க­லில் முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை. 2017 ஜன­வரி 16ம் தேதி குரு வக்­ர­மாகி துலாம் ராசிக்கு செல்­லும் பொழுது குடும்­பத்­தில் வாழ்க்­கைத் துணை­ந­லம் பெரு­கும். சிலருக்கு மனைவி மூல­மாக சொத்து – பொரு­ளா­தார மேன்மை கிட்­டும். இந்த ஆண்டு உங்­க­ளுக்கு பிர­தான கிர­கங்­க­ளில் கேது மட்­டுமே ஆண்டு முழு­வ­தும் லாப அனு­கூ­லம் தரும். திட்­ட­மிட்டு செயல்­ப­டுங்­கள். 2017 ஏப்­ரல் 13–ம் தேதி வரை இந்த பலன்­கள் நீடிக்­கும். தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு: இந்த ஆண்டு தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் கடி­ன­மா­கவே இருக்­கும். ஆனா­லும் லாப­க­ர­மான சூழ்­நிலை – நிதி நிலை­மையை சீர்­ப­டுத்­தும். வியா­பா­ரத்­தில் அலைச்­சல், போட்­டி­கள் சிர­மப்­ப­ டுத்­தும். ஆனா­லும் லாப­க­ர­மான சூழ்­நிலை நிதி நிலை­மையை சீர்­ப­டுத்­தும். வியா­பா­ரத்­தில் அலைச்­சல், போட்­டி­கள் சிர­மப்­ப­டுத்­தும். ஆனா­லும் லாபம் பெரு­கும் – வியா­பார விருத்தி இருக்­கும். கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : ஆகஸ்ட் மாதம் வரை கல்­வி­யில் முன்­னேற்­ற­மி­ருக்­கும் கலை, இலக்­கி­யம், மேன்மை தரும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் வெற்றி கிட்­டும். அதன் பிறகு சூழ்­நிலை சுமா­ரா­கவே இருக்­கும். 2017 ஜன­வரி 14 முதல் ஏப்­ரல் 13 வரை சூழ்­நி­லை­யில் முன்­னேற்­றம் வரும். விவ­சா­யி­க­ளுக்கு: தொழில்­சார்ந்த கடி­ன­மான சூழ்­நிலை இருந்­தா­லும் – நிதி நிலைமை சீராக இருக்­கும். ஆகஸ்ட் மாதத்­திற்கு பிறகு பரா­ம­ரிப்பு செல­வு­கள் கூடும். கடன் படல், பயண அலைச்­சல் இருக்­கும். 2017 ஜன­வரி 14–ம் தேதிக்கு பிறகு சூழ்­நி­லை­யில் நல்ல முன்­னேற்­றம் வரும். பெண்­க­ளுக்கு : குடும்­பப் பணி­க­ளில் சிறப்பு கூடும். புதி­ய­பொ­ருள் சேர்க்கை, சுப­கா­ரிய ஈடு­பாடு, ஆன்­மிக ஈடு­பாடு என நற்­ப­லன்­கள் இருக்­கும். ஆகஸ்ட் மாதத்­திற்கு பிறகு சூழ்­நி­லை­க­ளில் சிறிது மாற்­றம் வரும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. ஆண்­டின் கடைசி பகு­தி­யில் சுபிட்­ச­மாக இருக்­கும். குரு வக்ர பெயர்ச்சியாகி ஏழாம்மிடத்தில் வருவது தனதான்ய விருத்தி, குடும்ப மேன்மை, சுபகாரிய அனுகூலம் என நற்பலன்கள் இருக்கும்.

ரிஷபம்

இந்த புத்­தாண் டின் துவக்­கம் உங்­கள் பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். லாப­க­ர­மான விஷ­யங்­கள் அனு­கூ­ல­மா­கும். தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் ஆண்டு முழு­வ­தும் முன்­னேற்­றம் பெறும். புதிய தொழில் முயற்சி அனு­கூ­ல­மா­கும். குடும்ப சூழ்­நி­லை­கள் வர­வுக்கு ஏற்ற செல­வி­னங்­கள் இருக்­கும். வீண் செல­வு­கள் வரும், கவ­னம் தேவை. குடும்­பத்­தில் அவ்­வப்­போது சச்­ச­ர­வு­கள் வரும். செவ்­வாய், சனி சேர்க்கை – ஆகஸ்ட் வரை இருப்­ப­தால் – சூழ்­நி­லையை அனு­ச­ரித்து செயல்­ப­டு­வது உத்­த­மம். தாயார் உடல் நிலை – தேக ஆரோக்­யக் குைற சிர­மப்­ப­டுத்­தும். உற­வி­னர்­க­ளி­டையே மனக்­க­சப்பு வரும். தேக ஆரோக்­யக்­குறை பயண அலைச்­சல் சிர­மம் என சூழ்­நிலை இருக்­கும். குழந்­தை­கள் பரா­ம­ரிப்பு செல­வி­னங்­கள் கூடும். வழக்கு வியாஜ்­ஜி­யங்­கள் அனு­கூ­ல­மா­கும். புதிய பொருள் சேர்க்கை, வாகன வசதி கூடும். இந்த சூழ்­நிலை ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்­கும். அதன்­பி­றகு வரும் குருப்­பெ­யர்ச்சி உங்­க­ளுக்கு ஐந்­தா­மி­டம் வரு­வ­தால் – தன­லா­பம் பெரு­கும். பூர்­வீக சொத்து சம்­பந்­தப்­பட்ட விஷ­யங்­கள் அனு­கூ­ல­மா­கும். புத்­தி­ர­பாக்­யம் இல்­லா­த­வர்­க­ளுக்கு புத்­தி­ர­பாக்­யம் கிட்­டும். செல்­வம் செல்­வாக்கு பெரு­கும். பண­வ­ரவு சிர­மங்­களை குறைக்­கும். திரு­ம­ணம் போன்ற சுப­கா­ரி­யம் கைகூ­டும். குரு­வின் பார்வை 9–ம் இடம் 11–ம் இடம் ராசிக்கு இருப்­ப­தால் – தொழி­லில் முத­லீடு பெரு­கும். ஆன்­மி­கப் பய­ணம், திருப்­பணி செய்­தல் என சுப பலன்­கள் கிட்­டும். லாபஸ்­தான பார்வை தன­லா­பம், பதவி உயர்வு என நற்­ப­லன்­கள் இருக்­கும். குரு ராசியை பார்ப்­ப­தால் இட­மாற்­றம், சுக செளக்­யம் என பலன்­கள் இருக்­கும். இந்த சூழ்­நிலை 2017 ஜன­வரி மாதம் 13–ம் தேதி வரை நீடிக்­கும். அதன் பிறகு குரு வக்­ர­மாகி துலாத்­திற்கு செல்­லும் நேரத்­தில் – மனைவி வழி­சங்­க­டம், எதிர்­பா­ரத பிரச்­னை­க­ளால் கடன்­வாங்­கு­தல் என சூழ்­நிலை வரும். தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவைப்­ப­டும். இது 2017 ஏப்­ரல் 13–ம் தேதி வரை நீடிக்­கும். மொத்­தத்­தில் பிர­தான கிர­கங்­கள் கேது, குரு­வின் நற்­ப­லன்­கள் இருந்­தா­லும் சனி, ராகு­வின் சிரம பலன்­கள் இருக்­கும். எனவே திட்­ட­மிட்டு செயல்­ப­டுங்­கள் உத்­த­மம் தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு : இந்த ஆண்டு முழு­வ­தும் தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் – நல்ல முன்­னேற்­றம் பெறும். நிதி நிலைமை உய­ரும். வியா­பா­ரத்­தில் பரப்­ப­ரப்­பான சூழ்­நிலை வியா­பார விருத்தி – லாப­க­ர­மான முன்­னேற்­றம் இருக்­கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கல்­வி­யா­ளர், மாண­வர்­க­ளுக்கு : ஆகஸ்ட் மாதம் வரை சூழ்­நி­லை­கள் சுமா­ராக இருந்­தா­லும், அதன் பிறகு நல்­ல­முன்­னேற்­றம் வரும். உயர்­கல்­வி­யில் மேன்மை, கலை, இலக்­கி­யம் முன்­னேற்­றம் விளை­யாட்டு, போட்­டி­க­ளில் வெற்றி என மேன்­மை­யாக இருக்­கும். 2017 ஜன­வரி 14 முதல் ஏப்­ரல் 13–ம் தேதி வரை குரு வக்­ர­மா­வ­தால் சற்று சிர­மங்­கள் இருக்­கும். விவ­சா­யி­க­ளுக்கு : ஆகஸ்ட் மாதம் வரை கடின உழைப்பு வெளி­யூர் பயண அலைச்­சல், வீண் செலவு பரா­ம­ரிப்பு செலவு என சிர­மங்­கள் இருந்­தா­லும் அதன் பிறகு நல்ல முன்­னேற்­றம் வரும். பூமி லாபம் கால்­நடை விருத்தி, புதிய பொருள் சேர்க்கை என பொரு­ளா­தார முன்­னேற்­றம் இருக்­கும். ஆண்­டின் கடைசி மூன்று மாதங்­கள் மீண்­டும் சிரம பலன்­கள் இருந்­தா­லும் சமா­ளிப்­பீர்­கள். பெண்­க­ளுக்கு : ஆகஸ்ட் மாதம் வரை சுமா­ரான சூழ்­நிலை அதன்­பி­றகு குடும்­பத்­தில் சுபிட்­ச­மான சூழ்­நிலை, சுப­கா­ரிய ஈடு­பாடு, ஆன்­மிக ஈடு­பாடு புதி­ய­பொ­ருள் சேர்க்கை என முன்­னேற்­ற­மாக இருக்­கும். தேக ஆரோக்­யத்­தில் சிறு­சிறு தொல்லை வரும். குடும்­பத்­தில் சிறு சிறு பிரச்னை வரும். சூழ்­நி­லையை அனு­ச­ரிப்­பது உத்­த­மம். இட­மாற்­றம் பயண அலைச்­சல் உண்டு. அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. உறவினர் வழியில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம்.

மிதுனம்

இந்த புத்தாண்டு உங்­க­ளுக்­குப் புத்­து­ணர்ச்சி ஊட்­டும் வகை­யில் துவ ங்­கும். ராகு­வும், சனி­யும் உங்­க­ளுக்கு சுக­ஜீ­வ­னம், எதிர்ப்பு வில­கல் – கடன் தீரு­தல் – வழக்­கில் வெற்றி, வளர்ப்பு பிரா­ணி­கள் விருத்தி – தன­லா­பம் என ஆண்டு முழு­வ­தும் நற்­ப­லன்­களை வழங்­கு­வார்­கள். கேது­வின் 9–ம் இடம் சஞ்­சா­ரம் காரி­யத்­தடை, தேக ஆரோக்­யக்­குறை, கைப்­பொ­ருளை தவ­ற­வி­டு­தல் என சிர­ம­ப­லன்­களை தரு­வார். முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­பது அவ­சி­யம். மூன்­றா­மிட குரு – சிரம பலன்­களை தந்­தா­லும் ஆகஸ்ட் மாதத்­திற்கு பிறகு நான்­கா­மி­டம் செல்­லும் சம­யம் – உற­வி­னர் பகை, தாயார் உடல் நலக்­குறை, வீண் அலைச்­சல், பய­ணம், என தொடர்ந்து சிரம பலன்­களை தந்­தா­லும் குரு­வின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்­களை பார்ப்­ப­தால் ஆரோக்­யம், நினைத்த காரி­யம் கை கூடு­தல், தொழி­லில் கடின உழைப்பு பணிச்­சுமை கூடு­தல் – சுபச்­செ­ல­வி­னங்­கள் என பலன்­கள் இருக்­கும். குருப் பெயர்ச்சி அனு­கூ­ல­மற்ற சூழ்­நி­லை­யில் இருந்­தா­லும் 2017 ஜன­வரி மாதம் குரு­வக்­ரப் பெயர்ச்­சி­யாகி துலாம் ராசிக்கு செல்­லும் பொழுது ஆண்டு இறு­தி­வரை நற்­ப­லன்­கள் தரு­வார். புத்­தி­ரர்­க­ளால் மகிழ்ச்சி, பூர்­வீக சொத்­துக்­கள் அனு­கூ­லம், குழந்தை பாக்­யம், சுப­கா­ரிய ஈடு­பாடு, என நற்­ப­லன்­கள் இருக்­கும். ஆண்­டின் துவக்­கத்­தில் சனி­யு­டன் சேர்ந்­தி­ருக்­கும் செவ்­வாய் உங்­க­ளுக்கு பூமி லாபம், வீடு­யோ­கம், புதிய பொருள் சேர்க்கை, ஆப­ர­ணச் சேர்க்கை என நற்­ப­லன்­கள் வழங்­கு­வார். இந்த நிலை ஆகஸ்ட் மாதம்­வரை நீடிக்­கும். பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் சுபிட்­ச­ மாக இருந்­தா­லும் கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. குடும்­பத்­தில் சிறு சிறு பிரச்­னை­கள் வந்­தா­லும் அனு­ச­ரித்­துப் போவது உத்­த­மம். ஞாபக மறதி தொல்லை அவ்­வப்­போது சிர­மம் தரும். முன்­னெச்­ச­ரிக்­கை ­யு­டன் இருப்­பது அவ­சி­யம். உற­வி­னர்­க­ளி­டம் முன்­னெச்­ச­ரிக்கை தேவைப்­ப­டும். மொத்­தத்­தில் இந்த ஆண்டு ராகு, சனி, செவ்­வாய் போன்ற கிர­கங்­கள் உங்­க­ளுக்கு சாத­க­மான சூழ்­நி­லை­யில் உள்­ளன. குரு­வும், கேது­வும் சாத­க­மற்ற சூழ்­நி­லை­யில் இருப்­ப­தால் சூழ்­நி­லையை அனு­ச­ரித்து திட்­ட­மிட்டு செயல்­ப­டுங்­கள். ஆண்­டின் கடை­சி­யில் குரு அனு­கூ­லம் இருந்­தா­லும் வக்­ரம் என்­ப­தால் – முன்­னெச்­ச­ரி க்கை அவ­சி­யம் தேவை. தொழி­ல­தி­பர்­கள் வியா­பா­ரி­க­ளுக்கு : தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­க­ளில் கடின உழைப்பு, எதிர்­பா­ராத செல­வு­கள், என சூழ்­நிலை இருக்­கும். கூட்­டா­ளி­கள் ஒத்­து­ழைப்பு குறை­யும். வியா­பா­ரத்­தில் பணிச்­சுமை கூடும். வீண் அலைச்­சல், போட்­டி­கள் என சிர­மங்­கள் இருக்­கும். பொறு­மை­யு­டன் விடா­மு­யற்­சி­யும் அவ­சி­யம் தேவை. ஆண்டின் இறுதியில் குரு வக்ர பெயர்ச்சி பலன்கள், திருமணம் போன்ற சுபகாரிய ஈடுபாடு, தனலாபம், செல்வம் செல்வாக்கு பெருகும். கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : ஆகஸ்ட் மாதம் வரை கல்­வி­யில் சிர­மங்­கள் இருந்­தா­லும், விடா­மு­யற்சி நற்­ப­லன் தரும். கலை, இலக்­கி­யம் சுமா­ராக இருக்­கும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் கடின உழைப்பு தேவை. ஆகஸ்ட் மாதத்­திற்கு பிறகு சூழ்­நி­லை­யில் நல்ல முன்­னேற்­றம் வரும். கலை இலக்­கி­யம் மேன்­மை­யா­கும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் வெற்றி கிட்­டும். ஆண்டின் இறுதியில் குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் முன்னேற்றம் தரும். விவ­சா­யி­க­ளுக்கு : பூமி சார்ந்த லாபம் கூடும். வளர்ப்பு பிரா­ணி­கள், கால்­நடை விருத்தி லாபம் தரும். நிதி நிலைமை சீரா­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. ஞாப­க­ம­றதி தொல்லை வரும். புதிய பொருள் சேர்க்கை விவ­சா­ய­ வி­ருத்தி மகிழ்ச்சி தரும். பயண அலைச்சல் சிரமம் தரும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். பெண்­க­ளுக்கு : குடும்­பப் பணி­க­ளில் புதிய பொறுப்­பு­கள் வரும். அக்­கம் பக்­கத்­தில் கவ­னம் தேவை. சுப­கா­ரிய ஈடு­பாடு, ஆன்­மிக ஈடு­பாடு நற்­ப­லன் தரும். புதி­ய­பொ­ருள் சேர்க்கை, ஆப­ரண சேர்க்கை, வச­தி­கள் கூடும். தேக ஆரோக்­யம் அவ்­வப்­போது சிர­மம் தரும். இறை­ய­ருள் நன்மை தரும். குடும்ப பணிகளில் முன்னெச்சரிக்கை அவசியம் தேவை. ஞாபகமறதி தொல்லை சிரமம் தரும். திட்டமிட்டு செயல்படுங்கள் சிரமம் குறையும்.

கடகம்

இந்த புத்­தாண்டு உங்­க­ளுக்கு புதுப்­பொ­லி­வு­டன் துவங்­கு­கி­றது. 10–ம்மிடத்­தில் சூரிய, புதன் சேர்க்கை தொழில் ரீதி­யான புத்­தி­சா­லித்­த­னம் உங்­க­ளுக்கு பெருமை சேர்க்­கும். இரண்­டா­மி­டத்­தில் இருக்­கும் குரு உங்­க­ளுக்கு வாக்­கி­னால் வள­மும் நல­மும் சேரும். தன­வி­ருத்தி பகை வெல்­லு­தல், என நற்­ப­லன்­கள் இருக்­கும். இந்த சூழ்­நிலை ஆகஸ்ட் மாதம் குருப்­பெ­யர்ச்­சிக்கு பிறகு மாறும். மூன்­றா­மி­டம் செல்­லும் குரு செய்­யும் தொழி­லில் கடின உழைப்பு, சிர­மங்­க­ளைத் தரு­வார். முயற்­சி­க­ளில் காரி­யத்­தடை என சிரம பலன்­களை தரு­வார். 2017 பிப்­ர­வரி மாதம் வரை இந்த நிலை நீடிக்­கும். ஆண்­டின் இறு­தி­யில் குரு­வின் வக்ர சஞ்­சா­ரம் அவ­சி­ய­மற்ற பய­ணம், உற­வி­னர்­க­ளி­டையே மனக்­க­சப்பு, தேக ஆரோக்­யக்­குறை என சிரம பலன்­களை தரு­வார். 2–ல் ராகு சஞ்­சா­ரம் வெளி­யூர் பய­ணம், வீண் செல­வு­கள், திருட்டு பயம், ஞாப­க­ம­றதி தொல்லை என ஆண்டு முழு­வ­தும் சிரம பலன்­களை தரு­வார். ஆனா­லும் ஆகஸ்ட் மாதம் வரை குரு­சேர்க்கை இருப்­ப­தால் சிர­மங்­கள் குறை­யும். திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது அவ­சி­யம். எட்­டா­மி­டத்­தில் சஞ்­ச­ரிக்­கும் கேது பணச்­சிக்­கல், தேக ஆரோக்­யக்­குறை காரி­யத்­தடை, போன்ற சிர­மங்­களை ஆண்டு முழு­வ­தும் தரு­வார். யாருக்­கும் ஜாமீன் பொறுப்பு ஏற்க வேண்­டாம், சிக்­கல் வரும். இந்த சிர­மங்­கள் ஆகஸ்ட் மாதம் வரை குரு­பார்வை இருப்­ப­தால் குறை­யும். ஐந்­தா­மி­டத்­தில் இருக்­கும் சனி, சஞ்­சா­ரம் குடும்­பத்தை விட்டு வெளி­யூர் செல்­லு­தல், எதி­ரித்­தொல்லை தேக ஆரோக்­யக்­குறை, குழந்­தை­கள் பரா­ம­ரிப்பு சிர­மங்­கள் என ஆண்டு முழு­வ­தும் இருக்­கும். இருந்­தா­லும் கன்னி ராசி குரு­வின் 7–ம் இடம் பார்வை திரு­ம­ணம் போன்ற சுப­நி­கழ்ச்சி, தொழி­லில் முன்­னேற்­றம், என சுப பலன்­கள் இருக்­கும். 9–ம் இடத்­தில் குரு­பார்வை தொழில் ரீதி­யான முத­லீடு பெரு­கும். தீர்த்த யாத்­திரை செல்­லல், திருப்­பணி செய்­தல் என நற்­ப­லன்­கள் இருக்­கும். ராசிக்கு லாபஸ்­தா­னம் 11–ம் இடத்தை குரு பார்ப்­ப­தால், தன­லா­பம் பதவி உயர்வு, பொரு­ளா­தார முன்­னேற்­றம் இருக்­கும். இந்த பார்வை பலன்­கள் 2016 ஆகஸ்ட் மாதம் முதல் 2017 பிப்­ர­வரி மாதம் வரை நீடிக்­கும் சூழ்­நி­லையை அனு­ச­ரித்து திட்­ட­ மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம். தொழி­ல­தி­பர்­கள் வியா­பா­ரி­க­ளுக்கு: ஆண்­டின் முற்­ப­கு­தி­யில் தொழில் ரீதி­யான பரா­ம­ரிப்பு சிர­மம், முத­லீடு பெருக்­கம், என சூழ்­நி­லை­கள் இருக்­கும். ஆகஸ்ட் மாதத்­திற்கு பிறகு தொழி­லில் நல்ல முன்­னேற்­றம், உற்­பத்தி திறன் அதி­க­ரித்­தல், நிதி நிலைமை உயர்வு என நற்­ப­லன்­கள் இருக்­கும். வியா­பா­ரத்­தி­லும் இதே போல் முன்­னேற்­றம் இருக்­கும். கடின உழைப்பு, பயண அலைச்­சல் சிர­மம் இருக்­கும்.சூழ்நிலையை அனுசரித்து செயல்படுவது உத்தமம். கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு: ஆண்­டின் முற்­ப­கு­தி­யில் கல்­வி­யில் நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். ஆகஸ்ட் மாதத்­திற்கு பிறகு கடி­ன­மான சூழ்­நிலை இருந்­தா­லும் முன்­னேற்­ற­மா­கவே இருக்­கும். கடின உழைப்பு, விடா­மு­யற்சி நற்­ப­லன் தரும். கலை, இலக்­கி­யம், விளை­யாட்டு போட்­டி­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். விவ­சா­யி­க­ளுக்கு: விவ­சா­யப் பணி­க­ளில் கடின உழைப்பு இருக்­கும். பரா­ம­ரிப்பு, செல­வி­னங்­கள் வரும். கால்­நடை விருத்­தி­யா­கும். நிதி நிலைமை வர­வுக்கு ஏற்ப செல­வு­கள் இருக்­கும். ஜாமீன் பொறுப்பு ஏற்க வேண்­டாம். ஞாப­க­ம­றதி தொல்லை தரும். திட்­ட­மிட்டு முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வது உத்­த­மம். பெண்­க­ளுக்கு : குடும்­பப்­ப­ணி­க­ளில் சிறப்பு கூடும். சுப­கா­ரிய ஈடு­பாடு மகிழ்ச்சி தரும். பரா­ம­ரிப்பு செல­வி­னங்­கள் கூடும். உற­வி­னர்­க­ளி­டம் எச்­ச­ரிக்கை தேவை. குடும்ப பணி­க­ளில் முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை. வர­வுக்கு ஏற்ற செல­வு­கள் இருக்­கும். திட்­ட­மிட்டு செலவு செய்­வது உத்­த­மம். சூழ்­நி­லையை அனு­ச­ரித்து செயல்­ப­டுங்­கள். ஆன்மிக ஈடுபாடு நற்பலன்கள் தரும்.

சிம்மம்

இந்த புத்­தாண்­டில் உங்­க­ளுக்கு பொரு­ளா­தார சூழ்­நிலை முன்­னேற்­ற­மாக இருக்­கும். பிர­தான கிர­கங்­கள் சாத­க­மற்ற சூழ்­நி­லை­யில் இருப்­ப­தால் வரும் ஆகஸ்ட் மாதம் வரை உங்­க­ளுக்கு குரு மந்­த­மான சூழ்­நி­லை­யைத் தரு­வார். சூழ்­நிலை மாற்­றம், வீண் பிரச்­னை­கள் என சிர­மங்­களை கொடுத்­தா­லும், ஆகஸ்ட் மாதம் 2–ம் தேதிக்கு பிறகு கன்னி ராசிக்கு பெயர்ச்­சி­யா­கும் குரு தன­வி­ருத்தி, பொரு­ளா­தார முன்­னேற்­றம், எதிர்ப்பு வில­கல் – வாக்­கி­னால் வள­மும் நல­மும் வந்து சேரும். 2017 பிப்­ர­வரி மாதத்­தில் குரு வக்­கி­ர­மாகி துலாம் ராசிக்கு செல்­லும்­பொ­ழுது தொழில் ரீதி­யான சிர­மங்­கள், கடின உழைப்பு தரு­வார். காரி­யத்­தடை, குடும்­பத்­தில் சிறு சிறு பிரச்­னை­களை தரு­வார். இது ஏப்­ரல் 13–ம் தேதி வரை நீடிக்­கும். அதே போல் ராகு, கேது 1, 7 ஸ்தானத்­தில் இருந்து உற­வி­னர் பகை, வெளி­யூர் பய­ணம், தேக ஆரோக்­யக்­குறை அக்­னி­யால் அபா­யம், கூட்­டா­ளி­கள் இணக்­க­மின்மை, குடும்­பப் பிரச்னை, எதி­ரி­கள் தொல்லை என ஆண்டு முழு­வ­தும் சிர­மங்­களை கொடுக்­கும் சூழ்­நிலை உள்­ளது. ஆனா­லும் 2016 ஆகஸ்ட் வரை குரு சேர்க்கை குரு பார்வை இருப்­ப­தால் சிர­மங்­கள் ஓர­ளவு குறை­வா­கவே இருக்­கும். அதன் பிறகு தான் சூழ்­நிலை மாற்­றம் வரும். 4–ம் இடத்­தில் சஞ்­ச­ரிக்­கும் சனி, செவ்­வாய் சேர்க்கை செப்­டம்­பர் 9–ம் தேதி வரை நீடிப்­ப­தால் தேக ஆரோக்­யக்­குறை, உஷ்­ணம் சம்­பந்­தப்­பட்ட உபாதை, கெட்ட சக­வா­சத்­தொல்லை என சிர­மங்­கள் இருக்­கும். பூமி சார்ந்த விஷ­யங்­க­ளில் காரி­யத்­தடை இருக்­கும். அதன் பிறகு சனி­யின் நாலா­மிட ஆதிக்­கம் தொட­ரும். சொந்த ஊரை விட்டு வெளி­யே­று­தல், தாய் உடல் நலக்­கு­றை­பாடு, நம்­பிக்­கைக்கு உரி­ய­வர்­களே எதிர்ப்­பாக செயல்­ப­டு­வார்­கள். இது ஆண்டு முழு­வ­தும் நீடிக்­கும். ஆனா­லும் அக்­டோ­பர், நவம்­பர் மாதங்­க­ளில் செவ்­வாய் மகர ராசி­யில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது பூமி லாபம், கடன் தீரு­தல் – வீடு, மனை சார்ந்த விஷ­யம் அனு­கூ­ல­மா­கு­தல், பொன் – பொருள் சேர்க்கை என சுபிட்­ச­மான சூழ்­நிலை இருக்­கும். சூழ்­நி­லையை அனு­ச­ரித்து திட்­ட­மிட்டு செயல்­ப­டுங்­கள். சிர­மம் குறை­யும். தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு : 2016 ஆகஸ்ட் வரை தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் கடின உழைப்பு எதிர்­பா­ராத செல­வு­கள், கூட்­டா­ளி­கள் இணக்­க­மின்மை என சிர­மங்­கள் இருந்­தா­லும் ஆகஸ்ட் மாதம் துவக்­கத்­தில் தொழில் முன்­னேற்­றம், வியா­பார முன்­னேற்­றம் லாப­ர­க­மான சூழ்­நிலை, நிதி நிலைமை சீரா­கும். இந்த நிலை 2017 பிப்­ர­வரி மாதம் வரை நீடிக்­கும். அதன் பிறகு குரு வக்ர பலன் சிர­மங்­க­ளைத் தரும். கவனம் தேவை. கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : ஆகஸ்ட் மாதம் வரை கல்­வி­யில் முன்­னேற்­றம் சுமா­ரா­கவே இருக்­கும். குருப்­பெ­யர்ச்­சிக்கு பிறகு கல்­வி­யில் நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். கலை இலக்­கி­யம் மேன்­மை­பெ­றும். விளை­யாட்டு போட்­டி­கள் முன்­னேற்­ற­மாக இருக்கு. ஆண்­டின் இறு­தி­யில் மீண்­டும் சூழ்­நிலை சுமா­ரா­கவே இருக்­கும். விவ­சா­யி­க­ளுக்கு : கடின உழைப்பு இருக்­கும். எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் இருக்­கும். பயண அலைச்­சல் சிர­மம் தரும். ஆகஸ்ட் முதல் 2017 பிப்­ர­வரி வரை முன்­னேற்­ற­மாக சூழ்­நிலை, பூமி லாபம், பண­வ­ரவு, கால்­நடை விருத்தி என நற்­ப­லன்­கள் இருக்­கும். ஆண்­டின் இறு­தி­யில் மீண்­டும் சிர­ம­சூழ்­நிலை வரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெண்­க­ளுக்கு : ஆகஸ்ட் மாதம் வரை சிர­ம­மான சூழ்­நிலை இருக்­கும். வர­வுக்கு ஏற்ற செலவு இருக்­கும். அதன் பிறகு பொரு­ளா­தார முன்­னேற்­றம், குடும்ப முன்­னேற்­றம் – பொன், பொருள் சேர்க்கை, வீடு மனை போன்ற விஷ­யங்­க­ளில் அனு­கூ­லம் என்று சூழ்­நிலை இருக்­கும். இருந்­தா­லும் தேக ஆரோக்­கி­யக்­குறை சிர­மம் தரும். உற­வி­னர் பகை, குடும்­ப­ணி­யில் எச்­ச­ரிக்கை என சிர­மங்­கள் இருக்­கும். திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது அவ­சி­யம்.

கன்னி

இந்த புத்­தாண்டு உங்­க­ளுக்கு புத்­து­ணர்ச்சி ஊட்­டும் வகை­யில் சிறப்­பாக இருக்­கும். பிர­தான கிர­கங்­க­ளில் சனி, கேது – 3,6 என்ற ஸ்தானத்­தி­லி­ருந்து நற்­ப­லன்­களை ஆண்டு முழு­வ­தும் வழங்­கு­வார்­கள். தேக ஆரோக்­யம், முயற்­சி­க­ளில் வெற்றி, கடன் சுமை குறை­தல், வளர்ப்பு பிரா­ணி­க­ளால் லாபம், பண­வ­ர­வு­கள், வீடு, மனை போன்ற விஷ­யங்­க­ளில் அனு­கூ­லம். பொன், பொருள் சேர்க்கை, எதிர்­பா­ராத லாப வர­வு­கள், என முன்­னேற்­ற­மான சூழ்­நி­லை­கள் இருந்­தா­லும் 12–ம் இடத்­தில் இருக்­கும் குரு, ராகு சேர்க்கை உங்­க­ளுக்கு ஆகஸ்ட் மாதம் வரை சுபச்­செ­ல­வி­னங்­கள், வீண் செல­வு­கள், வெளி­யூர் பயண அலைச்­சல், தூக்­க­மின்மை, என சிர­ம­ப­லன்­களை தரு­வார்­கள். குருப்­பெ­யர்ச்சி உங்­கள் ராசிக்கு வரும்­பொ­ழுது சூழ்­நிலை மாற்­றம், மந்த நிலை, வீண் பிரச்­னை­கள் என சிரம பலன்­கள் இருக்­கும். 2017–ம் ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தி­லி­ருந்து ஆண்­டின் இறுதி வரை இரண்­டா­மி­டம் வக்­ர­மாகி செல்­லும் குரு வாக்கு பலம், தன­வி­ருத்தி பகை வெல்­லு­தல், காரிய அனு­கூ­லம் குடும்ப முன்­னேற்­றம் என நற்­ப­லன்­களை வழங்­கு­வார். 2016, அக்­டோ­பர், நவம்­பர் மாதங்­க­ளில் செவ்­வாய் மகர சஞ்­சா­ரம் தேக ஆரோக்­யக்­குறை, புத்­தி­ரர்­க­ளால் சிர­மம், பரா­ம­ரிப்பு சிர­மம், எதி­ரி­கள் தொல்லை இருக்­கும். முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­பது உத்­த­மம். குழந்தை இல்­லாத தம்­ப­தி­க­ளுக்கு இந்த ஆண்டு புத்­தி­ர­பாக்­க­யம் கிட்­டும். பூர்­விக சொத்து சம்­பந்­தப்­பட்ட விஷ­யங்­கள் அனு­கூ­ல­மா­கும். திரு­ம­ணம் போன்ற சுப­நி­கழ்ச்சி, தொழில் அபி­வி­ருத்தி, முத­லீடு பெருக்­கம், தீர்த்­த­யாத்­திரை செல்­லு­தல், கோவில் திருப்­பணி என சுப பலன்­கள் இருக்­கும். அதே சம­யம் ஆண்­டின் இறு­தி­யில் கடன் தொல்லை, தொழி­லில் கடின உழைப்பு, பணிச்­சுமை வீண் பிரச்­னை­கள் என சிரம பலன்­கள் வரும். முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­பட வேண்­டி­யது அவ­சி­யம். மொத்­தத்­தில் இந்த ஆண்­டில் உங்­க­ளுக்கு வர­வு­க­ளும் இருக்­கும். அதற்­கேற்ப செல­வு­க­ளும் இருக்­கும். வீடு, மனை யோகம் இருக்­கும். அதே சம­யம் கடன் வாங்கி செலவு செய்­யும் சூழ்­நி­லை­க­ளும் வரும். திட்­ட­மிட்டு செயல்­ப­டுங்­கள். தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு : இந்த ஆண்டு தொழில் ரீதி­யான முன்­னேற்­றங்­கள் இருக்­கும். நிதி நிலைமை முன்­னேற்­றம் பெறும். பரா­ம­ரிப்பு செல­வு­கள், ரிப்­பேர் செல­வி­னங்­கள் இருக்­கும். வியா­பா­ரத்­தில் விருத்­தி­யா­கும். கடின உழைப்பு இருக்­கும். முத­லீடு பெரு­கும். பயண அலைச்­சல் மிகுந்­தி­ருக்­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : ஆண்­டின் முற்­ப­கு­தி­யில் கல்­வி­யில் சுமா­ரான சூழ்­நிலை இருக்­கும். பிற்­ப­கு­தி­யில் நல்ல முன்­னேற்­றம் வரும். கலை, இலக்­கி­யம் மேன்­மை­யாக இருக்­கும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் முன்­னேற்­றம் இருக்­கும். கடின உழைப்பு, விடா­மு­யற்சி நற்­ப­லன் தரும். விவ­சா­யி­க­ளுக்கு : இந்த ஆண்டு விவ­சா­யப் பணி­க­ளில் நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். கால்­நடை விருத்தி விவ­சா­யப் பலன்­கள் அதி­க­ரிப்பு என நிதி நிலைமை உய­ரும். பூமி லாபம், வீடு, மனை, அனு­கூ­லம் உண்டு. பரா­ம­ரிப்பு செலவு, சுபச்­செ­ல­வு­கள் இருக்­கும். பயண அலைச்­சல், தேக ஆரோக்­யக்­குறை என சிர­மங்­க­ளும் இருக்­கும். திட்­ட­மி­டல் அவ­சி­யம். பெண்­க­ளுக்கு : நீண்ட நாள் கனவு நிறை­வே­றும். பொன், பொருள் சேர்க்கை இருக்­கும். குடும்­பத்­தில் சுப­நி­கழ்ச்­சி­கள் மன நிம்­மதி தரும். இறை­ய­ருள் இருக்­கும். குடும்ப பணி­கள் சிர­மங்­கள் அதி­க­ரிக்­கும். உற­வி­னர்­க­ளி­டம், அக்­கம்­பக்­கத்­தில் எச்­ச­ரிக்கை தேவை. வர­வுக்கு ஏற்ப குடும்­பச் செல­வு­க­ளும் இருக்­கும். திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம். போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவை. பயண அலைச்சல் சிரமம் தரும்.

துலாம்

இந்த புத்­தாண்டு உங்­க­ளுக்கு பொரு­ளா­தார ரீதி­யாக முன்­னேற்­ற­மாக இருக்­கும். ராசிக்கு 11–ம் இடத்­தில் இருக்­கும் குரு, ராகு சேர்க்கை உங்­க­ளுக்கு லாப­க­ர­மான விஷ­யங்­களை வழங்­கும். நீங்­கள் நினைத்த காரி­யம் கைகூ­டும். வீடு, மனை போன்ற விஷ­யங்­கள் லாப­க­ர­மாக அமை­யும். சொந்த வீடு கட்ட நினைத்­தி­ருந்­தால் அது நிறை­வே­றும். தன லாபம், பண­வ­ரவு வசதி வாய்ப்பை பெருக்­கும். சுக­செ­ளக்­யம் மிகுந்­தி­ருக்­கும். மகிழ்ச்­சி­க­ர­மான மன­நிலை இருக்­கும். இந்த நிலை ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்­கும். அதன் பிறகு குரு கன்னி ராசிக்கு பெயர்ச்­சி­யா­கும் பொழுது உங்­க­ளுக்கு சுபச்­செ­ல­வி­ன ங்­கள் கூடும். வெளி­யூர் பய­ணம், அலைச்­சல் பண­வி­ர­யம் என சூழ்­நிலை மாற்­றம் வரும். இது 2017–ம் ஆண்டு பிப்­ர­வரி வரை நீடிக்­கும். ஆண்­டின் இறு­தி­யில் குரு வக்­ர­மாகி துலா ராசிக்கு வரும் பொழுது மந்த நிலை, சூழ்­நிலை மாற்­றம் வீண் சச்­ச­ரவு என சூழ்­நிலை இருக்­கும். புத்­தி­சா­லித்­த­ன­மாக திட்­ட­மிட்­டுச் செயல்­ப­டுங்­கள். சிர­மம் குறை­யும். உங்­கள் ராசிக்கு 2–ம் இடத்­தில் சனி, செவ்­வாய் சேர்க்கை இருப்­ப­தால் எதி­ரி­கள் தொல்லை, அக்னி அபா­யம், திருட்டு பயம், கோபம், வெளி­யூர் பய­ணம், பண­வி­ர­யம் என சிரம பலன்­கள் செப்­டம்­பர் மாதம் வரை நீடிக்­கும். அதன் பிறகு செவ்­வாய் பெயர்ச்­சி­யாகி தனு­சுக்கு செல்­கி­றார். அதன் பிறகு சனி­யின் சிர­மங்­கள் ஓர­ளவு குறை­வா­கவே ஆண்டு முழு­வ­தும் இருக்­கும். தேக ஆேராக்­யத்­தில் கவ­ன­மாக இருப்­பது அவ­சி­யம். 5–ம் இடத்­தில் சஞ்­ச­ரிக்­கும் கேது எதி­ரித்­தொல்லை, தேக ஆரோக்­யக்­குறை, புத்­தி­ரர்­க­ளால் மன­வ­ருத்­தம் பூர்­விக சொத்து பரா­ம­ரிப்பு செல­வு­கள் என சிரம பலன்­களை தரு­வார். ஆகஸ்ட் மாதம் வரை குரு­பார்வை இருப்­ப­தால் ஓர­ளவு குறை­வாக இருந்­தா­லும், குருப்­பெ­யர்ச்­சி க்கு பிறகு சற்று கூடு­த­லாக இருக்­கும். அதே போல் விரைய ஸ்தான குரு­வின் பார்வை, 6–ம் இடத்­தில் விழு­வ­தால் உடல் நலக்­குறை, கடன் வாங்­கு­தல் என சூழ்­நிலை இருக்­கும் 8–ம் இடத்­தில் குரு பார்வை தேக ஆரோக்ய விருத்தி தரும். 10–ம் இடத்­தில் பார்வை பணிச் சுைமயை அதி­க­ரிக்­கும். மொத்­தத்­தில் இந்த ஆண்டு செல­வி­னங்­கள் அதி­க­மாக இருந்­தால் வீடு கட்­டு­தல், பொருள் சேர்க்கை என சுப பலன்­க­ளும் இருக்­கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு : ஆண்­டின் முற்­ப­கு­தி­யில் தொழி­லில் நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். நிதி நிலைமை, முத­லீடு பெருக்­கம் என இருக்­கும். பிற்­ப­கு­தி­யில் பரா­ம­ரிப்பு செல­வு­கள், கூடு­தல் பணிச்­சுமை இருக்­கும். வியா­பா­ரத்­தில் லாபம் பெரு­கும். வியா­பார விருத்­தி­யா­கும். கடின உழைப்பு, அலைச்­ச­லும் இருக்­கும். கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : ஆண்­டின் முற்­ப­கு­தி­யில் கல்­வி­யில் நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். கலை, இலக்­கி­யம், விளை­யாட்டு மேன்மை பெறும். ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் கடின உழைப்பு, முழு ஈடு­பாடு இருந்­தால் நற்­ப­லன்­கள் கூடும். முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை. பொழுதுபோக்கு அம்சங்களை தவிர்ப்பது உத்தமம். விவ­சா­யி­க­ளுக்கு : விவ­சா­யப் பணி­யில் கடின உழைப்பு இருக்­கும். பயண அலைச்­சல் பரா­ம­ரிப்பு செல­வி­னங்­கள் அக்னி அபா­யம் திருட்டு என சிரம சூழ்­நிலை வரும். கால்­நடை விருத்­தி­யா­கும். திட்­ட­மிட்டு முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வது உத்­த­மம். பெண்­க­ளுக்கு : குடும்ப பணி­யில் சிர­மங்­கள் கூடும். அக்னி அபா­யம், திருட்டு போன்ற விஷ­யங்­க­ளில் எச்­ச­ரிக்கை தேவை. பயண அலைச்­சல் தேக ஆரோக்­யக்­குறை இருக்­கும். ஆனா­லும் இந்த ஆண்டு பொன், பொருள் சேர்க்கை, வீடு, மனை யோகம் உண்டு. எனவே பணி சிரமங்கள் கூடும். சூழ்நிலையை அனுசரித்து, முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டு செயல்படுங்கள்.

விருச்சிகம்

இந்த புத்­தாண்டு உங்­க­ளுக்கு பொரு­ளா­தார சூழ்­நி­லை­யில் ஏற்ற இறக்­க­மாக இருக்­கும். ராசி­யில் சனி, செவ்­வாய் சேர்க்கை செப்­டம்­பர் மாதம் வரை நீடிக்­கி­றது. உற­வி­னர் பகை, வெளி­யூர் பய­ணம், அலைச்­சல், அக்னி அபா­யம், தேக ஆரோக்­கி­யக்­குறை, எதி­ரி­க­ளால் தொல்லை என சிரம பலன்­கள் இருக்­கும். அதன் பிறகு செவ்­வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்­சி­யான பிறகு சனி­யின் சிரம பலன்­கள் குறை­யும். 10–ம் இடத்­தில் ராகு­வு­டன் சஞ்­ச­ரிக்­கும் குரு உங்­க­ளுக்கு தொழில் ரீதி­யான சிர­மங்­களை தரு­வார். கடின உழைப்பு, காரி­யத்­தடை, வீண் பிரச்னை என சிர­மங்­கள் ஆகஸ்ட் மாதம் வரை இருக்­கும். அதன் பிறகு குரு – கன்னி ராசிக்கு லாபஸ்­தான சஞ்­சா­ரம் பெறு­வ­தால் இது­வரை கொடுத்த சிர­மங்­களை குறைத்து – பொரு­ளா­தார மேன்மை, தன­லா­பம், எண்­ணிய எண்­ணம் ஈடே­று­தல், வீடு, மனை போன்ற விஷ­யங்­க­ளில் லாபம் என நற்­ப­லன்­களை 2017 பிப்­ர­வரி மாதம் வரை வழங்­கு­வார். திட்டமிடல் அவசியம் தேவை. ஆண்­டின் இறு­தி­யில் குரு வக்ர பெயர்ச்சி சுபச் செல­வி­னங்­களை தரும். நாலா­மி­டத்­தில் சஞ்­ச­ரிக்­கும் கேது, உங்­க­ளுக்கு தேக ஆரோக்­கி­யக்­குறை, உஷ்ண உபா­தை­கள், என சிர­மங்­களை ஆண்டு முழு­வ­தும் வழங்­கு­வார். ஆனா­லும் ஆகஸ்டு மாதம் வரை குரு­வின் பார்வை கேது­வுக்கு இருப்­ப­தால் சிர­மங்­கள் குறை­வாக இருக்­கும். திடீர் பண­வ­ர­வு­கள் உங்­கள் சிர­மங்­களை குறைக்­கும். ராசி நாதன் செவ்­வாய் அக்­டோ­பர் மாதம் மகர ராசி­யில் சஞ்­ச­ரிக்­கும் 1 மாத காலத்­தில் பொரு­ளா­தார முன்­னேற்­றம், பண­வ­ர­வு­கள், தன­லா­பம், இறை­ய­ருள் எதிர்ப்­பு­களை வெல்­லு­தல் என நற்­ப­லன்­களை வழங்­கு­வார். இந்த புத்­தாண்டு துவக்­கத்­தில் உங்­க­ளுக்கு பிர­தான கிர­கங்­கள் எல்­லாமே சாத­க­மற்ற சூழ்­நி­லை­யில் இருந்­தா­லும் – ஆகஸ்ட் மாதத்­திற்கு பிறகு குரு 11–ம் இடத்­தில் வரும் சம­யத்­தில் நற்­ப­லன்­களை வழங்­கு­வார். எனவே சூழ்­நி­லையை புரிந்­து­கொண்டு முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம். தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு : ஆண்­டின் முற்­ப­கு­தி­யில் கடி­ன­மான சூழ்­நி­லை­கள் இருக்­கும். நிதி நிலைமை சுமா­ராக இருக்­கும். ஆகஸ்ட் மாதம் தொடங்கி முன்­னேற்­றங்­கள் வரும். நிதி நிலைமை உய­ரும். உற்­பத்தி திறன் கூடும். வியா­பா­ரத்­தில் கடின உழைப்பு, வீண் அலைச்­சல், போட்­டி­கள், சிர­மப்­ப­டுத்­தி­னா­லும் லாப­க­ர­மான சூழ்­நிலை இருக்­கும். கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : இந்த ஆண்­டின் முற்­ப­குதி கடி­ன­மான சூழ்­நிலை இருக்­கும். பிற்­ப­கு­தி­யில் சூழ்­நிலை மாற்­றம் முன்­னேற்­ற­மாக இருக்­கும். கலை, இலக்­கி­யம் மேன்மை தரும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் வெற்றி கிடைக்­கும். திட்­ட­மிட்டு முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வது உத்­த­மம். பொழுது போக்கு அம்சங்களை குறைத்து முழு ஈடுபாடு காட்டுவது உத்தமம். விவ­சா­யி­க­ளுக்கு : விவ­சா­யப் பணி­யில் நெருக்­கடி – கடின உழைப்பு இருக்­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. கால்­நடை பரா­ம­ரிப்பு சிர­மங்­கள் இருக்­கும். ஆண்­டின் முற்­ப­குதி கடி­ன­மாக இருந்­தா­லும் பிற்­ப­கு­தி­யில் சிர­மங்­கள் குறைந்து நிம்­மதி தரும். தனதான்ய சேர்க்கை கால்நடை விருத்தி லாபம் தரும். பெண்­க­ளுக்கு : குடும்­பப் பணி­க­ளில் நெருக்­கடி கூடும். தேவை­கள் அதி­க­ரிக்­கும். தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவைப்­ப­டும். அக்­கம் பக்­கத்­தில் கவ­னம் தேவை. அக்னி அபா­யம், ஞாபக மறதி, தொல்லை சிர­மப்­ப­டுத்­தும். புதி­ய­ பொ­ருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சுபகாரிய ஈடுபாடு மகிழ்ச்சி தரும். புதிய முயற்சிகள் காரிய அனுகூலமாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும்.

தனுசு

இந்த புத்தாண்டில் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். 3–ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களுக்கு பணவரவுகள், தனலாபம், எதிர்ப்பு வெல்லுதல் தெய்வ அருள் கிட்டுதல் – என நற்பலன்களை ஆண்டு முழுவதும் வழங்குவார். 9–ம் இடத்தில் இருக்கும் குரு மனைவி, மக்கள், சுற்றம் ஆகிய சூழ்நிலையில் மகிழ்ச்சியை தருவார். முயற்சிகளில் வெற்றி, வெளியூர் பயண அனுகூலம், என நற்பலன்களை ஆகஸ்ட் மாதம் வரை வழங்குவார். அதன் பிறகு 10–ம் இடம் செல்லும் குரு உங்களுக்கு தொழில் ரீதியான சிரமங்களை கொடுப்பார். கடின உழைப்பு, வீண் பிரச்னைகள், வீண் விரயம் என சிரம பலன்களை 2017 பிப்ரவரி மாதம் வரை வழங்குவார். அதன் பிறகு குருவக்ர பெயர்ச்சி 11 ஆமிடம் செல்லும்போது லாபகரமான விஷயங்கள் வழங்குவார். நீங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும். தனலாபம், வீடு, மனைவி சார்ந்த விஷயங்களில் லாபம் என்று நற்பலன்களை ஆண்டின் இறுதிக்கட்டத்தில் வழங்குவார். கன்னி ராசியில் குரு பார்வை 2,4,6 ஆகிய இடங்களில் பதிவதால் – தனவிருத்தி கல்வி முன்னேற்றம், தேக ஆரோக்யம் என நற்பலன்களும் இருக்கும். ராசிக்கு 9–ம் இடத்தில் எதிரிகள் தெலால்லை, காரியத்தடை, வீண் விவகாரம் என சிரம பலன்களை ஆண்டு முழுவதும் வழங்குவார். ஆகஸ்ட் மாதம் வரை குருசேர்க்கை இருப்பதால சிரமங்கள் பெரிய அளவில் இருக்காது. ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி உங்களுக்கு சிரமங்கள், தூக்கமின்மை, பண விரயம் என்று சிரம பலன்களை ஆண்டு முழுவதும் வழங்குவார். அதே போல் 12–ம் இடத்தில் இருக்கும் செவ்வாய் உங்களுக்கு கண் சம்பந்தமான உபாதை, பித்த உபாதை, பண விரயம் என சிரம பலன்களை செப்டம்பர் மாதம் வரை வழங்குவார். இந்த ஆண்டில் உங்களுக்கு குரு மற்றும் கேது சாதகமான சூழ்நிலையில் உள்ளது. ராகுவும், சனியும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவை. தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : இந்த ஆண்டின் முற்பகுதியில் தொழில் ரீதியான முன்னேற்றங்கள் இருக்கும். உற்பத்தி திறன் கூடும். நிதி நிலைமை சீராகும். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொழில் ரீதியான சிரமங்கள் கூடும். காரியத்தடை நிதி நெருக்கடிகளை தருவார். வியாபாரத்தில் முற்பகுதி லாபகரமாக இருக்கும். பிற்பகுதியில் கடின உழைப்பு, போட்டி, அலைச்சல் என சிரமங்கள் இருக்கும். கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : ஆகஸ்ட் மாதம் வரை கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 2017 பிப்ரவரி வரை கடின சூழ்நிலைகள், அலைச்சல் வீண் விவகாரம் என சூழ்நிலை இருக்கும். மீண்டும் ஆண்டின் கடைசி இரண்டு மாதங்கள் முன்னேற்றமாக இருக்கும். கலை, இலக்கியம், விளையாட்டு சுமாராக இருக்கும். விவசாயிகளுக்கு : விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கால்நடை விருத்தி இருக்கும். பராமரிப்பு செலவினங்களும் இருக்கும். ஆண்டின் இறுதியில் லாபகரமான சூழ்நிலை வரும். திட்டமிட்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். பெண்களுக்கு : குடும்பப் பணிகளில் சிறப்பு கூடும். உறவுகள் மேன்மையடையும் சுபகாரிய செலவுகள் வரும். தேக ஆரோக்யத்தில் சிரமங்கள் அவ்வப்போது வரும். ஆன்மிக ஈடுபாடு நற்பலன் தரும். குடும்ப பணிகளில் முன்னெச்சரிக்கை தேவை. வீடு, மனை லாபகரமாக அமையும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். கடன் பிரச்னைகளில் கவனம் தேவை.

மகரம்

இந்த புத்­தாண்­டில் உங்­க­ளுக்கு பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். ராசி­நா­தன் சனி, செவ்­வா­யு­டன் இணைந்து விருச்­சி­கத்­தில் சஞ்­ச­ரிப்­பது லாப­க­ர­மான விஷ­யங்­கள் அனு­கூ­ல­மா­கும். செப்­டம்­பர் மாதம் வரை லாபஸ் தானத்­தில் இருக்­கும் செவ்­வாய் உங்­க­ளுக்கு தன­லா­பம், பண­வ­ர­வு­கள், சுக­செ­ளக்­யம் என நற்­ப­லன்­களை வழங்­கு­வார். அதன் பிறகு தனசு ராசிக்கு செல்­கி­றார். அதே போல் சனி லாபஸ்­தான சஞ்­சா­ரம் பெண்­க­ளால் சந்­தோ­ஷம், தன­லா­பம், பொரு­ளா­தார மேன்மை, சுக­செ­ளக்­யம் என நற்­ப­லன்­களை ஆண்டு முழு­வ­தும் வழங்­கு­வார். ராசி­நா­தன் மட்­டுமே சாத­க­மாக இருக்­கி­றார். அதே சம­யம் 8–ம் இடத்­தில் இருந்து சிரம பலன்­க­ளைத்­த­ரும் குரு பண­சிக்­கல், சுக­மின்மை, காரி­யத்­தடை என சிர­மப்­ப­டுத்­தி­னா­லும் ஆகஸ்ட் மாதத்­திற்கு பிறகு கன்னி ராசிக்­குச் சென்று மனைவி மக்­கள் சுற்­றம் ஆகி­ய­வற்­றில் சந்­தோ­ஷ­மான சூழ்­நிலை, முயற்­சிக்­கும் அனைத்து காரி­யங்­க­ளி­லும் வெற்றி, வெளி­யூர் பயண அனு­கூ­லம் என நற்­ப­லன்­களை 2017 பிப்­ர­வரி மாதம் வரை வழங்­கு­வார். இந்த கால கட்­டத்­தில் குரு பார்வை 1,3,5 ஆகிய இடங்­க­ளில் பதி­வ­தால், சுக­செ­ளக்­யப் பெருக்­கம், இட­மாற்­றம் செல­வி­னங்­கள், சகோ­தர மேன்மை பூர்­வீக சொத்து அனு­கூ­லம், புத்­தி­ர­பாக்­யம் என பலன்­கள் இருக்­கும். ஆண்­டின் இறு­தி­யில் வக்­ர­மாகி குரு துலாம் ராசிக்கு செல்­லும்­போது தொழில் ரீதி­யான சூழ்­நிலை கடி­ன­மாக இருக்­கும். கடின உழைப்பு, வீண் பிரச்னை என சிர­மங்­கள் இருக்­கும். 8–ம் இடத்­தில் இருக்­கும் ராகு நெருங்­கிய உற­வி­னர் உங்­களை விட்டு பிரி­தல், குடும்­பத்தை விட்டு வெளி­யூர் செல்­லும் சூழ்­நிலை, காரி­யத்­தடை என ஆண்டு முழு­வ­தும் சிரம பலன்­களை தரு­வார். குருச்­சேர்க்கை இருக்­கும் வரை இந்த சிர­மங்­கள் குறை­வா­கவே இருக்­கும். 2–ம் இடத்­தில் இருக்­கும் கேது உங்­க­ளுக்கு எதி­ரி­க­ளால் தொல்லை, அக்னி அபா­யம் திருட்டு பயம், கோபம், அர­சு­வழி எதிர்ப்பு என சிரம பலன்­க­ளைத் தரு­வார். குரு­வின் பார்வை ஆகஸ்ட் மாதம் வரை இருப்­ப­தால் இந்த சிர­மங்­கள் மட்­டுப்­ப­டும். எனவே பிர­தான கிர­கங்­க­ளின் சூழ்­நி­லையை மன­தில் கொண்டு முன்­னெச்­ச ­ரிக்­கை­யு­டன் திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம். இறை சிந்­தனை நற்­ப­லன் தரும். தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு : இந்த ஆண்டு தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் லாப­க­ர­மாக இருக்­கும். தொழில் விருத்­தி­யா­கும். உற்­பத்தி திறன் அதி­க­ரிக்­கும். வியா­பா­ரத்­தில் கடின உழைப்பு, போட்­டி­கள் மிகுந்­தி­ருந்­தா­லும் லாப­க­ர­மான சூழ்­நிலை நில­வும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவைப்­ப­டும். முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வது உத்­த­மம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : ஆண்­டின் முற்­ப­கு­தி­யில் சிர­ம­மான சூழ்­நி­லை­கள் நில­வும். ஆகஸ்ட் மாத்­திற்கு பிறகு கல்­வி­யில் நல்ல முன்­னேற்­றம் வரும். கலை, இலக்­கி­யம் மேன்மை பெறும். விளை­யாட்டு, போட்­டி­க­ளில் வெற்றி கிட்­டும். விடா­மு­யற்சி, முழு ஈடு­பாடு நற்­ப­லன் தரும். விவ­சா­யி­க­ளுக்கு : விவ­சா­யப் பணி­க­ளில் நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். பூமி சார்ந்த விஷ­யம் லாபம் தரும். கால்­நடை விருத்­தி­யா­கும். நிதி நிலைமை சீரா­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. வெளி­யூர் பயண காரி­யம் அனு­கூ­ல­மா­கும். பெண்­க­ளுக்கு : குடும்ப பணி­க­ளில் சிர­மம் கூடும். எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் வரும். குடும்­பப் பணி­க­ளில் எச்­ச­ரிக்கை தேவை. சுப­கா­ரிய முயற்­சி­கள் முன்­னேற்­றம் பெறும். ஆன்­மிக ஈடு­பாடு நற்­ப­லன் தரும். உற­வி­னர்­க­ளி­டம் எச்­ச­ரிக்­கை­யாக இருப்­பது உத்­த­மம். புதிய பொருள் சேர்க்கை, ஆன்மிகப் பயணம் மகிழ்ச்சி தரும்.

கும்பம்

இந்த புத்­தாண்­டில் உங்­கள் பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் ஏற்ற இறக்­க­மா­கவே இருக்­கும். ராசிக்கு 7–ம் இடத்­தில் இருக்­கும் குரு உங்­க­ளுக்கு தன தான்ய விருத்தி, சுப­கா­ரிய ஈடு­பாடு, குடும்ப மேன்மை என்று நற்­ப­லன்­களை வழங்­கு­வார். இந்த நிலை ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்­கும். அதன் பிறகு 8–ம் இடத்­திற்கு குரு பெயர்ச்­சி­யா­வது சாத­க­மற்ற சூழ்­நிலை. யாருக்­கும் ஜாமீன் பொறுப்பு ஏற்க வேண்­டாம். தேக ஆேராக்­யக்­குறை, காரி­யத்­தடை, வீண் விர­யம் என சிரம பலன்­கள் 2017 பிப்­ர­வரி மாதம் வரை நீடிக்­கும். ஆண்­டின் இறு­தி­யில் மீண்­டும் சுப பலன்­கள் வரும். எங்­கும் எதி­லும் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி, வெளி­யூர் பயண அனு­கூ­லம் என நற்­ப­லன்­கள் இருக்­கும். கன்னி ராசி­யில் குரு இருக்­கும் பொழுது அவ­ரது பார்வை உங்­கள் ராசிக்கு 11, 1, 3 ஆகிய ஸ்தானங்­க­ளில் பதி­வ­தால் தன­லா­பம், பதவி உயர்வு, இட­மாற்­றம், சுக­போ­கம், சகோ­தர மேன்மை என பலன்­கள் இருக்­கும். ராசி­யில் இருக்­கும் கேது, தேக ஆரோக்­யக்­குறை, காரி­யத்­தடை, எதி­ரி­க­ளால் தொல்லை என சிரம பலன்­களை கொடுத்­தா­லும் குரு பார்வை இருப்­ப­தால் சிர­மங்­கள் குறை­யும். ஆகஸ்ட் மாதத்­திற்கு பிறகு ஆண்டு முழு­வ­தும் கேது சிர­மப் பலன்­களை தரு­வார். ராசி­நா­தன் சனி சஞ்­சா­ரம் 10–ம் இடத்­தில் இருப்­ப­தால் தொழில் ரீதிய சிர­மங்­கள், கடின உழைப்பு, உடல் சோர்வு, மனச்­சோர்வு இருக்­கும். இது ஆண்டு முழு­வ­தும் இருப்­ப­தால் விடா­மு­யற்சி, தன்­னம்­பிக்கை, தைரி­ய­மி­ருந்­தால் தொழில் ரீதி­யான சிர­மங்­கள் மட்­டுப்­ப­டும். அதே சம­யம் 10–ம் இடத்­தில் செவ்­வாய் செப்­டம்­பர் மாதம் வரை இருப்­ப­தால் தொழில் ரீதி­யான நற்­ப­லன்­கள் இருக்­கும். பல வழி­க­ளில் பண­வ­ர­வு­கள், தொழில் முன்­னேற்­றம் இருக்­கும். எனவே சனி சாத­கம் இல்­லா­விட்­டா­லும் செவ்­வாய் சாத­க­மாக இருப்­ப­தால் தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­ப­டுங்­கள். 7–ம் இடத்­தில் சஞ்­ச­ரிக்­கும் ராகு ஆண்டு முழு­வ­தும் சிரம பலன்­களை தரு­வார். அதா­வது காதல் சம்­பந்­தப்­பட்ட பிரச்­னை­கள், கூட்­டா­ளி­கள் மனக்­க­சப்பு, வெளி­யூர் பயண அலைச்­சல் போன்ற சிர­மங்­கள் வரும். சூழ்­நி­லையை அனு­ச­ரித்து முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம். தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு : தொழில் சார்ந்த சூழ்­நிலை கடின உழைப்பு, கூட்­டா­ளி­கள் இணக்­க­மின்மை, பயண அலைச்­சல் என்று இருந்­தா­லும் நிதி­நி­லைமை சீரா­கவே இருக்­கும். லாப­க­ர­மாக இருக்­கும். வியா­பா­ரத்­தில் கடின உழைப்பு, கூட்­டா­ளி­கள் ஒத்­து­ழைப்­பின்மை, போட்டி என சிர­மங்­கள் இருந்­தா­லும் – வியா­பா­ரம் லாப­க­ர­மாக இருக்­கும். கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : ஆகஸ்ட் மாதம் வரை கல்­வி­யில் நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். அதன் பிறகு கடி­ன­மான சூழ்­நி­லை­கள் சிர­மப்­ப­டுத்­தும், பயண அலைச்­சல் – வீண் பிரச்­னை­கள் வரும். கவ­னம் தேவை. கலை, இலக்­கி­யம் சுமா­ராக இருக்­கும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் விடா­மு­யற்சி முழு ஈடு­பாடு தேவைப்­ப­டும். ஆண்டு இறுதியில் மீண்டும் முன்னேற்றம் வரும். விவ­சா­யி­க­ளுக்கு : விவ­சா­யப் பணி­க­ளில் கடின உழைப்பு இருக்­கும். வீண் பயண அலைச்­சல், தொழி­லா­ளி­கள் இணக்­க­மின்மை என சிர­மங்­கள் இருக்­கும். நிதி நிலைமை சீராக இருக்­கும். கால்­நடை விருத்தி லாபம் தரும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. பெண்­க­ளுக்கு : குடும்­பப் பணி­க­ளில் ஆகஸ்ட் மாதம் வரை சிறப்பு கூடும். சந்­தோ­ஷம் இருக்­கும். பொரு­ளா­தார முன்­னேற்­றம் இருக்­கும். அதன்­பி­றகு தேக ஆரோக்­யக்­குறை, உடல் சோர்வு, மனச்­சோர்வு என சிர­மங்­கள் இருக்­கும். ஆன்­மிக ஈடு­பாடு நற்­ப­லன்­கள் தரும். குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை. தேக ஆரோக்யத்தில் கவனம் தேவைப்படும்.

மீனம்

இந்த புத்­தாண்­டில் உங்­கள் பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். ராசிக்கு 6–ம் இடத்­தில் சஞ்­ச­ரிக்­கும் ராகு உங்­க­ளுக்கு எதிர்ப்­பு­களை வெல்­லு­தல், கடன் சுமை குறை­தல், தேக ஆரோக்­யம், வழக்கு வியாஜ்­ஜி­யங்­க­ளில் வெற்றி என நற்­ப­லன்­களை ஆண்டு முழு­வ­தும் வழங்­கு­வார். குரு சேர்க்கை இருப்­ப­தால் எதிர்­பா­ராத திடீர் தன­லா­பம் கிடைக்­கும். அதே போல 6–ம் இடத்­தில் இருக்­கும் குரு, உங்­க­ளுக்கு கடன் வாங்­கும் நெருக்­கடி, குடும்­பத்­தில் வீண் வாக்­கு­வா­தங்­கள், உடல் சோர்வு, மனச்­சோர்வு என சிரம பலன்­களை ஆகஸ்ட் மாதம் வரை வழங்­கு­வார். அதன் பிறகு கன்னி ராசி 7–ம் இடத்­திற்கு குரு பெயர்ச்­சி­யா­கும் பொழுது இது­வரை கொடுத்த சிர­மங்ள் விலகி, குடும்­பத்­தில் சுப­கா­ரிய நிகழ்ச்சி, குடும்ப மேன்மை, பொரு­ளா­தார வள­ரச்சி, தன தான்ய சேர்க்கை என நற்­ப­லன்­களை 2017–ம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் வரை வழங்­கு­வார். ஆண்­டின் இறு­தி­யில் வக்ர பெயர்ச்சி துலாம் ராசிக்கு செல்­லும் பொழுது மீண்­டும் சிரம பலன்­கள் தரு­வார். அந்த நேரத்­தில் யாருக்­கும் ஜாமீன் கொடுக்க வேண்­டாம். முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டும். காதல் போன்ற விஷ­யங்­கள் சிக்­க­லா­கும். ஆனா­லும் கன்னி ராசி­யில் குரு இருக்­கும் பொழுது அவ­ரது பார்வை உங்­கள் ராசிக்கு 11–ம் இடம், ராசி, 3–ம் இடத்­தில் பதி­வ­தால் தன­லா­பம், பதவி உயர்வு, சுக­செ­ளக்­யம், இட­மாற்­றம், சகோ­த­ர­மேன்மை என சுப பலன்­கள் இருக்­கும். 9–ம் இடத்­தில் இருக்­கும் சனி உங்­க­ளுக்கு எதி­ரி­க­ளால் சிர­மம், காரி­யத்­தடை, பிற­ருக்கு கட்­டுப்­ப­டு­தல் என ஆண்டு முழு­வ­தும் சிரம பலன்­க­ளைத் தரு­வார். உடன் இருக்­கும் செவ்­வாய் தேக ஆரோக்­யக்­குறை, காரி­யத்­தடை ஞாப­க­ம­றதி தொல்லை, கைப்­பொ­ருளை தொலைத்­தல், திருட்டு பயம், என சிரம பலன்­களை செப்­டம்­பர் மாதம் வரை வழங்­கு­வார். அதன் பிறகு அவர் தனுசு ராசி செல்­லும் பொழுது முன்­னேற்­ற­மான நற்­ப­லன்­களை தரு­வார். குரு, ராகு ஆகிய கிர­கங்­கள் சாத­க­மான பலன்­களை உங்­க­ளுக்கு தந்­தா­லும் சனி, கேது சாத­க­மற்ற சூழ்­நி­லை­யில் உள்­ளது. கேது 12–ம் இடத்­தில் சஞ்­ச­ரிப்­பது செல­வி­னங்­கள், பண­வி­ர­யம், பித்த சம்­பந்த உபாதை, கண் சம்­பந்­தப்­பட்ட உபாதை என சிரம பலன்­களை ஆண்டு முழு­வ­தும் வழங்­கு­வார். எனவே கிரக சூழ்­நி­லை­களை அனு­ச­ரித்து முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம். தொழி­ல­தி­பர்­கள், வியா­ப­ரி­க­ளுக்கு : ஆண்­டின் முற்­ப­கு­தி­யில் தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் கடின உழைப்பு, கூட்­டா­ளி­கள் இணக்­க­மின்மை சிர­மம் தரும். பிற்­ப­கு­தி­யில் தொழில் முன்­னேற்­றம் வரும். நிதி நிலைமை சீரா­கும். உற்­பத்தி திறன் கூடும். வியா­பா­ரத்­தில் ஆண்­டின் முற்­ப­கு­தி­யில் கடின உழைப்பு, அலைச்­சல், வீண் விர­யம், போட்­டி­கள் சிர­மப்­ப­டுத்­தும். பிற்­ப­கு­தி­யில் முன்­னேற்­றம் பெரு­கும். வியா­பார விருத்­தி­யா­கும். கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : ஆகஸ்ட் மாதம் வரை கல்­வி­யில் சிர­மம் இருந்­தா­லும் முன்­னேற்­ற­மாக இருக்­கும். கலை இலக்­கி­யம் மேன்மை பெறும். பிற்­ப­கு­தி­யில் முன்­னேற்­ற­மான சூழ்­நிலை இருக்­கும். விளை­யாட்டு போட்­டி­கள் வெற்றி பெறும். முழு ஈடு­பாடு காட்­டி­னால் சிர­மங்­கள் குறை­யும். விவ­சா­யி­க­ளுக்கு : விவ­சா­யப் பணி­க­ளில் கடின உழைப்பு இருக்­கும். காரி­யத்­தடை, எதி­ரி­கள் தொல்லை என சிர­மங்­கள் இருந்­தா­லும், பூமி சார்ந்த லாபம் தன­தான்ய சேர்க்கை, கால்­நடை விருத்தி இருக்­கும். ஞாப­க­ம­றதி தொல்லை, திருட்­டு­ப­யம் இருக்­கும். முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை. பெண்­க­ளுக்கு : குடும்ப பணி­க­ளில் ஆகஸ்ட் மாதம் வரை சிர­மம் இருக்­கும். அதன் பிறகு சிறப்பு கூடும். சுப­கா­ரிய ஈடு­பாடு புதி­ய­பொ­ருள் சேர்க்கை, குடும்ப மேன்மை, இறை­ய­ருள் என நற்­ப­லன்­கள் ஆண்டு முழு­வ­தும் இருக்­கும். குடும்­பப் பணி­க­ளில் முன்­னெச்­ச­ரிக்கை தேவை. கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை.