மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் குறைந்தது

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 20:10

புதுடில்லி,

மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் கடந்த 7 மாத காலத்தில் 2.48 சதவீதம் குறைந்துள்ளது.


பிப்ரவரி மாதத்தில் பணவீக்க அளவு கடந்த 7 மாத காலத்தில் வெளியிடப்பட்ட பணவீக்க அளவில் மிகவும் குறைவானது ஆகும். இதற்கு முன்னார் ஜூலை மாதத்தில் மொத்த விலை குறியீட்டெண் பண வீக்கம் 1.88 சதவீதமாக இருந்தது என இந்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் காய்கறிகள் விலை 15.26 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 40.77 சதவீதமாக இருந்தது. 

வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்தாலும், உருளைக்கிழங்கு விலை அதிகரித்துள்ளது.

இதைபோல் பருப்பு வகைகளின் விலை குறைந்துள்ளது. முட்டை, இறைச்சி மீன் வகைகளின் விலையும் குறைந்தது.

அதேபோல பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான மொத்த விலை பணவீக்கம் 3.81 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த மாதம் ஜனவரில் 4.08 சதவீதமாக இருந்தது.

ஆலைப் பொருள்களின் மொத்த விலைக்குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த மாதத்தை விட அதிகரித்துள்ளது.