பட்டுப்பாதை வர்த்தகத் திட்டங்களை கவனிக்க தனிக் கார்ப்பரேஷன் – சீனா அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 15:30

பெல்ஜியம்,

   சீன நகரத்திலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஆப்கானிஸ்தான் துறைமுகம் வரை செல்லும் பழைய பட்டுப்பாதை வர்த்தகத்துக்கு புத்துயிர் ஊட்டத் துவக்கப்பட்டுள்ள பெல்ட் அண்ட் ரோட்  இன்ஷியேட்டிவ் திட்டப் பணிகளை கவனிக்க புதிய கார்ப்பரேஷனங ஒன்றை அமைப்பதாக சீனா அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் இந்த சீனாவின் புதிய பட்டுப்பாதை வர்த்தக முயற்சிகளை இந்தியா அங்கீகரிக்கவில்லை. இறையாண்மை தொடர்பான விஷயத்தில் சமரசத்துக்கு இடம் இல்லை என்று இந்தியா கூறியது. இந்தியாவையும்  அந்தத் தி்ட்டத்தில் சேரும்படி  சீனா கோரி வந்தது. ஆனால் இந்தியா அதனை தொடர்ந்து நிராகரித்து வந்தது.
சீனா துவக்கிய பட்டுப்பாதை வர்த்தகத் திட்டத்தை சீன வெளியுறவு அமைச்சகமும் கவனித்து வந்தன. அதனால்  பல குழப்பங்களுக்கு இடம் ஏற்பட்டது.

பட்டுப்பாதை திட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் காரணமாக சீனா தொடர்ந்து கடும் இழப்புகளைச் சந்தித்து வந்தது.

இந்நிலையில் சீன அரசு வெளி நாட்டில் செய்யும் முதலீடு தொடர்பான முதலீடுகளை வெளியுறவு  அமைச்சகம் .கையாள்வது பொருத்தமாகவும் பயனுள்ளதாகவும் அமையவில்லை. அதனால் ஸ்டேட் இன்டர்நேஷனல் டெவலப்மெண்ட் கோ ஆபரேஷன் ஏஜென்சி (எஸ்ஐடிசிஏ) என்ற பெயரில் புது அமைப்பு ஒன்றை உருவாக்குவதாக சீன அரசு இன்று அறிவித்தது.

இந்தப் புதிய அமைப்பு ஸ்டேட் கவுன்சில், சீன அமைச்சரவை, சீனப் பிரதமர் லி கெக்கியாங் ஆகியோருக்கு கட்டுப்பட்டதாக இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

இந்தப் புதிய ஏஜென்சியைத் துவக்குவதற்கான அனுமதி, அதன் அமைப்பு விதிகள் நடைமுறை விதிகளுக்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் தர வேண்டும். சீன நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டம் இப்பொழுது நடைபெறுவதால் ஒப்புதலை எளிதாக சீன அதிபர்  ஜி ஜின்பிங் பெற்றுவிட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.