அரியானா காங்., ஆட்சியில் 912 ஏக்கர்நிலம் எடுத்தது ரத்து

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 02:32


புதுடில்லி:

அரியானாவில் காங்,,  ஆட்சி நடந்த போது, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினருக்காக 912 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது,  செல்லாது என்று சுப்ரீம்கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

அரியானாவில் பூபேந்தர்சிங்ஹூடா தலைமையில்காங்கிரஸ் ஆட்சி நடந்த போது, கடந்த2004 முதல்2007 வரை  யிலான  கால கட்டத்தில் மானேசர், லக்னோலா,நுரங்கபூர்ஆகியகிராமங்களில் தொழில் நகரியடம் உருவாக்கப் போவதாக கூறி 912 ஏக்கர் நிலம்கையகப்படுத்தப்பட்டது.  அதன் பிறகு அந்தப் பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளும்அடி மாட்டு விலைக்கு, தனியார் ரியல்எஸ்டேட் அதிபர் களிடம் தங்களது நிலத்தை விற்று விட்டனர். ஆரம் பத்தில் ஏக்கர் ரூ.25லட்சத்துக்கு விலை போன இடங்கள்,பின்னர் ரூ-80 லட்சம்வரை விற்கப்பட்டது. இறுதியில் டிஎல்எப் ஹோம் டெவலப்பர்ஸ் நிறுவ னம்,ஏக்கர் ரூ.4.5 கோடிக்கு அந்த நிலத்தை வாங்கியது. இதன்பிறகு அந்த தொழில் நகரம் திட்டத்தை கைவிடுவதாக ஹூடா அரசு அறிவித்தது.  இதையடுத்து ஹூடா உள்ளிட்ட 35 பேர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தது. உச்சநீதி மன்றத்தில்நடந்து வந்த இந்த வழ க்கின் விசாரணையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதிகள் ஏ.கே.கோயல், உதய் லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதை விசாரித்து அளித்த தீர்ப்பில் தனியார் நிலங்களை வாங்கிய பின்னர், தொழில் நகரம் திட்டத்தையே கைவிடுவ தாக அரசு அறிவித்தது, மோசடி எண்ணத்துடன் தான் நடத்தப்பட்ட நிலம் கையெடுப்பாக கருதப்படுகிறது. அரசு அதிகாரிகள் துணையுடன் தனியார் அந்த இடங்களை வளைத்துக்கொண்டனர்.  நிலம் கையகப்படுத் தும் சட்ட விதிகளுக்கு புறம்பாகவே இந்த நிலங்களை சட்ட விரோதமாக வளைத்துள்ளது நிரூபணமாகி உள்ளது. இதில் பெருந்தொகையுடன் இடைத்தரகர் கள் சிலர் விளையாடி உள்ளனர்.எனவே இந்த நிலம் கையெடுப்பு செல்லாது என ரத்து செய்யப்படுகிறது.

இந்த நிலத்துக்கு உரிய தொகையை நிலத்தின் சொந்தக் காரர்கள் இழப்பீடாக பெற்று விட்டார்கள். எனவே அவர்களுக்கு இந்த நிலத்தை ஒப்படைக்கவேண் டாம். கையகப்படுத்திய நிலங்களை அப்படியே அரசிடம் ஒப்படைக்கவேண்டும்.

எனவே அரியானா நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் மற்றும் அரியானா தொழில் வளர்ச்சிக்கழகத்திடம் இந்த நிலங்களை ஒப்படைக்கவேண்டும். நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட  இழப்பீடு தொகையை தனியார் பில்டர்கள் பெறுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது.   இந்த நிலம் கையகப்படுத்த எடுத்த முடிவு என்பது, ஆட்சியில் இருந்தவர்களின் மோசடி என்பதே நிரூபணமாகி விட்டது. இதனால் ஏற்பட்டஇழப்பீடுகளை ஒவ்வொரு ரூபாயையும் வசூலித்து மாநில அரசிடம் ஒப்படைக்கவேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறிஉள்ளனர்.