ரபேல் போர் விமானத்துக்கு 16 மாதம்கழித்தே ஒப்புதல்

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 02:17


புதுடில்லி:

பிரான்சு நாட்டிடம் இருந்து ரூ.58ஆயிரம்கோடிக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மோடி அரசுஒப்பந்தம் செய்தது. ஆனால் இதற்கு பாதுகாப்புத்துறைக்கான கேபினட் கமிட்டி ஒப்புதலைப் பெறவே இல்லை என்று காங்.,  தலைவர் ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். இது பற்றி ராஜ்யசபாவில்  காங்.  உறுப்பினர் விவேக் தங்கா கேள்வி எழுப்பினார். அந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது, பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவை குழுவின் ஒப்புதல் பெறப்பட்டதா என்று கேட்டிருந்தார்.

 ஆனால் அந்த ஒப்பந்தம்வெளியான பிறகு 16மாதங்கள் கழித்தே, 36 போர் விமானங்கள் வாங்க 2016 ஆகஸ்ட் 24ம் தேதி பாதுகாப்புத்துறைக்கான  அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.  ஒரு விமானத்தின்விலை ரூ.670 கோடி தான் என்று  ராணுவ இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே தெரிவித்தார், அதற்குரிய இதர கருவிகள், ஆயுதங்கள் மற்றும் சேவைக்கான கட்டணம் என்ன என்பதை குறிப்பிடவில்லை.