ஜெயா பச்சன் சொத்து ரூ.1000 கோடி

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 02:15


லக்னோ:

உ.பி.யில் இருந்து ராஜ்யசபாவுக்கு சமாஜ்வாடி கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் நடிகை ஜெயா பச்சன். இவர் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார்.அப்போது தாக்கல் செய்த சொத்து பட்டியலில்,  தனக்கு ரூ-.1000 கோடி சொத்து இருப்பதாக கணக்குகாட்டி உள்ளார். தனக்கும், தனது கணவர் அமிதாப் புக்கும் ரூ-.460 கோடிக்கும் மேல் அசையா சொத்துக்கள்உள்ளன. அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ-540கோடி என்றும் கணக்கு காட்டி உள்ளார்.கடந்த 2012ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த கணக்கை விட இரு மடங்குஅதிகமாக தற்போது சொத்து கணக்கு காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே தேர்தலில் உ,பி,யில்போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ரவீந்திர கிஷோர் ரூ-.800 கோடி சொத்து இருப்பதாக கணக்கு காட்டி உள்ளார்.