இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி சென்னை – பெங்களூரு பலப்பரீட்சை

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 01:14


சென்னை:

 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதி போட்டிக்கு சென்னை அணி தகுதி பெற்றுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 4வது சீசன் நடந்து வருகிறது. அரையிறுதிக்கு பெங்களூரு, சென்னை, கோவா, புனே அணிகள் தகுதி பெற்றிருந்தன. இதில் பெங்களூரு அணி புனே அணியை இருமுறை எதிர்கொண்டது. இரு அணிகளும் மோதிய முதல் சுற்று அரையிறுதி டிராவில் முடிந்தது. பெங்களூருவில் நடந்த இரண்டாவது சுற்று அரையிறுதியில் பெங்களூரு அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.  

சென்னை, கோவா அணிகளுக்கு இடையே கோவாவில் நடந்த முதல் சுற்று அரையிறுதி போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு நடந்த இரண்டாவது சுற்று அரையிறுதியில் சென்னை அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.  

சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜெஜெ 2 கோல்களும், தனபால் ஒரு கோலும் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 2015ல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை

அணி தற்போது இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே சமயம் பெங்களூரு அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதி போட்டி பெங்களூருவில் உள்ள காண்டிவீரா மைதானத்தில் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.