சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் மார்ச் 20ம் தேதி அதிபர் டிரம்புடன் சந்திப்பு

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 20:41

வாஷிங்டன்,

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரும் மார்ச் 20ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுவார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘‘சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரை சந்திக்க அதிபர் டிரம்ப் மிகவும் ஆவலுடன் உள்ளார். இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது, இரு நாடுகளின் பொது பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னுரிமைகளை முன்னேற்றுவது ஆகியவை குறித்து பட்டத்து இளவரசருடன் டிரம்ப் விவாதிப்பார்’’ என சாரா சாண்டர்ஸ் கூறினார்.

இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளை மாளிகைக்கு வருவது இதுவே முதல்முறை. அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவுக்கு வருகிறார். அமெரிக்காவை தவிர பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கும் அவர் பயணம் மேற்கொள்கிறார்.