வங்கிகள் எல்.ஓ.யூ. வழங்கும் முறைக்கு ரிசர்வ் வங்கி தடை

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 19:45

மும்பை:

   பஞ்சாப் தேசிய வங்கி ரூ. 13,000 கோடியை இழக்கக் காரணமாக அமைந்த லெட்டர்ஸ் ஆப் அண்டர்டேக்கிங் (எல்ஓயூ - LoU) முறையை இந்திய ரிசர்வ் வங்கி இன்று தடை செய்தது.

வெளிநாட்டு வர்த்தகத்துக்கு உதவியாக இறக்குமதியின் போதோ, வர்த்தகத் தொகைக்கு ஈடாக லெட்டர்ஸ் ஆப் அண்டர்டேக்கிங் வழங்கும் நடைமுறை இன்றுடன் நிறுத்தப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
வர்த்தகக் கடன்களுக்காக லெட்டர்ஸ் ஆப் கிரெடிட், வங்கி கியாரண்டி வழங்கும் நடைமுறை விதிகளுக்கிணங்க தொடர்ந்து நடைபெறும்.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு ஸ்விப்டு நடைமுறை ரத்தானதாகக் காட்டுகிறது எனக் கூறலாம்.