பாரெ­வர் பேவ­ரிட் – பெப்சி உமா! – நக்­க்ஷத்ரா

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018

''டிவி ஹோஸ்ட்­டுன்னா பெப்சி உமா­தான் ஞாப­கத்­துக்கு வரும். அவங்­கன்னா, எனக்கு பயங்­கர பேவ­ரிட்!'' என்று ஒரு துள்­ள­லோடு சொல்­கி­றார் 'சன் சிங்­கர்' நக்­க்ஷத்ரா.

அவ­ரு­டைய பேட்டி:–

'''பெப்சி உங்­கள் சாய்ஸ்' ஷோவை பெப்சி உமா ஹோஸ்ட் பண்­ணிக்­கிட்­டி­ருந்த சம­யத்­திலே நான் ரொம்ப சின்ன பொண்ணு. அந்த ஷோவுக்கு கால் பண்ணி, எனக்கு இந்த பாட்டை போடுங்க, அந்த பாட்டை போடுங்க அப்­ப­டி­யெல்­லாம் கேட்­டி­ருக்­கேன். நான் முதன்­மு­தலா அவங்­க­கிட்ட ஷோவிலே பேசும் போது – என்ன சாப்­பிட்­டீங்­கன்னு என்னை கேட்­டாங்க. அதுக்கு, நான் ரசம் சாதம் சாப்­பிட்­டேன்னு சொன்­னேன். உடனே அவங்க, ரசம் சாதம் நல்லா இருக்­கான்னு கேட்­டாங்க. நல்லா இருக்­குன்னு சொன்­னேன். என்ன பாட்டு வேணும்னு கேட்­டாங்க. என் தலை­வர் பாட்டை போடுங்­கன்னு சொன்­னேன். அவ்­வ­ளவு ஸ்வீட்டா, ரொம்ப இன்ட்­ரஸ்ட் எடுத்து குழந்­தைங்­க­கிட்ட எப்­படி பேச­ணுமோ, அப்­படி பேசு­வாங்க. ஸோ, எனக்குபாரெ­வர் பேவ­ரிட் ஆங்க்­கர்ன்னா, அது அவங்­க­தான்.

நான் எங்க சேன­லுக்கு (சன் டிவி) போகும் போதே – ''பெப்சி உமா ஒர்க் பண்ண சேனல்ல ஒர்க் பண்ண போறேன்''னுதான் சொன்­னேன். ஏன்னா, அவங்க காலத்­திலே, அவங்­க­ளோட சக்­சஸ் யாருக்­குமே கிடைக்­கலே. அவங்க பேரு, பட்­டித்­தொட்­டி­யெல்­லாம் தெரி­யும். எல்­லா­ருமே அவங்­க­ளோட ஷோவை பார்ப்­பாங்க.

நான் பண்ற ஒவ்­வொரு ஷோவை பத்­தி­யும் எங்­கம்மா ரொம்ப கிரிட்­டி­சைஸ் பண்­ணு­வாங்க. ஆரம்­பத்­திலே, நான் ஹோஸ்ட் பண்­ணும் போது நிறைய இங்­கி­லீஷ்  வார்த்­தை­களை யூஸ் பண்­ணு­வேன். அப்­படி பேசு­றதை பெரிய குற்­றமா எங்­கம்மா சொல்­வாங்க. இந்த இங்­கி­லீஷ் வார்த்­தைக்கு பதிலா, இந்த தமிழ் வார்த்­தையை பயன்­ப­டுத்­த­லா­மேன்னு சொல்­வாங்க. மேலும், என்­னோட ஒவ்­வொரு காஸ்ட்­யூ­மை­யும் அம்­மா­தான் சூஸ் பண்­ணு­வாங்க.

'வாணி ராணி' எனக்கு பர்ஸ்ட் சீரி­யல். அதுக்கு முன்­னாடி நிறைய ஷார்ட் பிலிம்­கள் பண்­ணி­யி­ருக்­கேன். இப்போ கூட ஷார்ட் பிலிம்­கள்ல நடிக்­கி­றேன். அது மேலே எனக்கு பயங்­கர இன்ட்­ரஸ்ட் உண்டு. ஹீரோ­யின், ஸ்வீட்­டான பொண்ணு, சாப்ட்­டான பொண்ணு இந்த மாதிரி பாசிட்­டிவ் கேரக்­டர்­கள்­ல­தான் நடிச்­சி­ருக்­கேன். ஆனா, 'வாணி ராணி'யிலே மட்­டும்­தான் 'ருத்ரா'ன்னு ஒரு நெகட்­டிவ் ஷேடு உள்ள கேரக்­டர்ல நடிச்­சேன். இப்போ டிராக் எங்­கெங்கோ மாறி போயி­டுச்சு. ஷூட்­டிங்­குக்கு கூப்­பிட்­டாங்­கன்னா ஆக்ட் பண்ண வேண்­டி­ய­து­தான்!''