பிசி­னஸ் செய்­யப்­ப­டும் பெர்­ச­னல் மேட்­டர்!

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018

அந்த டிவி ஷோவை பார்க்­கும் போது 'இப்­ப­டி­யும் ஒரு ஷோவா!' என்றே மிக­வும் பிர­மிக்க முடி­கி­றது; அதி­ச­யிக்­க­வும் வைக்­கி­றது.

ஒரு பிர­பல தமிழ் சினிமா நடி­கர் தனக்­கான லைப் பார்ட்­னரை தேர்ந்­தெ­டுப்­ப­தற்­காக அவர் 'பெண்'(களை) பார்க்­கும் பட­லம்­தான் ஷோவின் மெயின் கான்­செப்ட்! ஆனால், பெண்ணை தேடி அவர் போக­வில்லை. உல்­டா­வாக, பெண்­கள்­தான் இந்த 'மாப்­பிள்ளை' நடி­கரை தேடி ஜெய்­பூர் பேலே­ஸுக்கு வருகை தந்­த­னர். ஜெய்­பூர் பேலேஸ் எதற்கு? அங்­கே­தானே ஷூட்­டிங்கே நடக்­கி­றது? சென்ற மாதம் நமக்கு அறி­மு­க­மான கலர்ஸ் தமிழ் டிவி­யில் ஒளி­ப­ரப்­பாகி வரும் 'எங்க வீட்டு மாப்­பிள்ளை'யைத்­தான் சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றோம்!

இந்த ஷோவுக்­காக பிரத்­யே­க­மாக ஜெய்­பூர் மாளி­கையை செம பியூட்­டி­புல்­லாக டெக்­க­ரேட் பண்­ணி­யி­ருக்­கின்­ற­னர். விஜய் சேது­ப­தியை போல 'ப்ப்ப்ப்ப்பா.....' என்­று­தான் சொல்ல தோன்­று­கி­றது.

''ரொம்ப வரு­ஷமா நான் எங்கே போனா­லும், என்னை சுத்தி வந்த ஒரே கேள்வி – 'மச்­சான்! உனக்கு எப்­படா கல்­யா­ணம்?' அப்­ப­டீங்­க­ற­து­தான். இன்­னைக்கு நான் ஒரு முடி­வோ­டு­தான் வந்­தி­ருக்­கேன். ஐ வான்ட் டு கெட் மேரீட்!'' என்று முதல் எபி­சோ­டில் தனது அறி­முக உரை­யில் 'மாப்­பிள்ளை' ஆர்யா குறிப்­பிட்­டார். உடனே, ஷோவை ஹோஸ்ட் பண்­ணும் நடிகை சங்­கீதா கிரிஷ், ''நிஜ­மாவே நீங்க கல்­யா­ணம் பண்­ணிக்க போறீங்­களா?'' என்று கேட்க, அதற்கு ஆர்யா 'ஆமா' என்று தலை­ய­சைத்­தார். மறு­ப­டி­யும் சங்­கீதா அவ­ரி­டம், ''சீரி­யஸ்லி?'' என்று கேட்­டார். ''இனிமே ஸ்விம்­மிங் பண்ண வேண்­டி­ய­து­தான்!'' என்­றார் ஆர்யா.  அதை தொடர்ந்து ஒரு

சில 'பில்ட் – அப்' கேள்வி – பதில்­கள் இடம்­பெற்­றன. (நமக்கு சிரிப்­பு­தான் வந்­தது)

ஆர்­யா­வின் வீடி­யோவை பார்த்­து­விட்டு 70 ஆயி­ரம் பெண்­கள் போன் பண்­ணி­ய­தா­க­வும், 8 ஆயி­ரம் பேர் அப்ளை பண்­ணி­ய­தா­க­வும் சங்­கீதா அவ­ரி­டம் கூறி­னார். (இது ஓவரா இல்லே!)

மொத்­தம் 16 பேர் ஒவ்­வொ­ரு­வ­ராக பேலே­ஸுக்கு வந்­த­னர். மாடல், பேஷன் டிசை­னர், ஐடி ஊழி­யர், பேங்க் மேனே­ஜர், பாடகி, வீடியோ ஜாக்கி, மருத்­துவ துறையை சார்ந்­த­வர் என வெவ்­வேறு துறை­களை சேர்ந்­த­வர்­க­ளும், வெவ்­வேறு மாநி­லத்­த­வர்­க­ளும் (துபாய், மலே­சியா, சிங்­கப்­பூர் உட்­பட) இடம்­பெற்­றி­ருந்­த­னர். ஆர்­யாவை கவர்­வ­தற்­காக அவர்­க­ளுக்கு பல­வித போட்­டி­க­ளும் (டிரஸ், மேக் – அப், சமை­யல், பூனை நடை...... இப்­படி பல) இடம்­பெற்­றன. இவர்­க­ளி­லி­ருந்து இரண்டு பேர் 'எலி­மி­னேட்' செய்­யப்­பட்­டுள்­ள­னர் (இதை எழு­தும் போது). எஞ்­சி­யுள்ள 14 பெண்­க­ளுக்­கும் போட்­டி­கள் தொட­ரப் போகின்­றன. இவை அனைத்­தி­லும் வெற்றி பெற்று ஆர்­யாவை கைப்­பி­டிக்க போவது யார் என்­பது கடை­சி­யில் தெரி­ய­வ­ரும்.

ஒரு நடி­க­ரின் பெர்­ச­னல் மேட்­டரை, அவ­ரு­டைய உறு­து­ணை­யோடு எந்த அள­வுக்கு காசாக்­கு­கி­றார்­கள் என்­பதை பார்த்­தீர்­களா? ப்ச்!

– டிவி ப்ரியன்