அர­சி­யல் தலை­வர்­க­ளி­டம் நேரடி கேள்வி!

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018

அர­சி­யல் தலை­வர்­களை நேருக்கு நேராக உட்­கார வைத்து, அர­சி­யல், சமூக பிரச்­னை­கள் ஆகி­யவை குறித்து அவர்­க­ளது நிலைப்­பா­டு­கள், அது குறித்து எழுப்­பப்­ப­டும் சந்­தே­கங்­கள் ஆகி­ய­வற்றை துல்­லி­ய­மான கேள்­வி­கள் மூலம் விவா­திக்­கும் நிகழ்ச்சி 'வியூ­கம்.'

இது சனிக்­கி­ழ­மை­க­ளில் இரவு 9 மணிக்­கும் இதன் மறு ஒளி­ப­ரப்பு  ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் இரவு 7 மணிக்­கும் நியூஸ் 7 தமி­ழில் ஒளி­ப­ரப்­பா­கி­றது. விஜ­யன், நெல்­சன் இரு­வ­ரும் தொகுத்து வழங்­கு­கின்­ற­னர்.

தற்­போ­தைய அர­சி­யல் சூழல், கட்­சி­க­ளின் நிலைப்­பாடு, மக்­க­ளின் எதிர்­பார்ப்பு, கள நில­வ­ரம், கூட்­டணி ஏற்­பா­டு­கள், தொலை­நோக்­குத் திட்­டங்­கள், தேர்­தல் வியூ­கங்­கள்  உள்­ளிட்ட  பல்­வேறு விஷ­யங்­கள் குறித்து அர­சி­யல் கட்­சி­த­லை­வர்­க­ளி­டம்  நேர­டி­யாக  கேள்­வி­கள் எழுப்­பப்­பட்டு விரி­வான பதில்­கள் பெறப்­ப­டும் வகை­யில் நிகழ்ச்சி வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

 நிகழ்ச்­சி­யின் தனி­ சி­றப்­பாக, அர­சி­யல் தலை­வர்­க­ளின் பழைய நினை­வு­களை மீட்­டெ­டுக்­கும் வகை­யில்  அர­சி­ய­லுக்கு  வந்­தது எப்­படி,  இயல்­பாக  நடந்­ததா, விபத்தா , திட்­ட­மி­டலா  அல்­லது கட்­டா­யமா என்­பன போன்ற கேள்­வி­க­ளும்  இடம்­பெ­று­கின்­றன.