கிராம வாழ்க்­கை­யில் 12 நக­ர­வா­சி­கள்!

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018

விஜய் டிவி­யில் 'வில்லா டு வில்­லேஜ்'  புதிய என்­டர்­டெய்ன்­மென்ட் நிகழ்ச்சி சனி மற்­றும் ஞாயி­று­தோ­றும் இரவு 9.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பில் உள்­ளது. 'ரெடி ஸ்டெடி போ' ஆண்ட்­ரூஸ் இதை தொகுத்து வழங்­கு­கி­றார்.

நக­ரத்தை சேர்ந்த பன்­னி­ரண்டு  பெண்­கள், கிரா­மத்து வாழ்க்­கையை மேற்­கொள்­கின்­ற­னர். இதற்­கெல்­லாம் மேலாக, பணம் மற்­றும் எந்­த­வி­த­மான நவீன வச­தி­க­ளும் இல்­லா­மல் நாற்­பது நாட்­கள் அவர்­கள் அங்­கேயே தங்கி அந்த சூழ­லுக்கு ஏற்­றாற்­போல  வாழ்ந்து காட்­ட­வேண்­டும். அது­தான் போட்டி.

அந்த கிரா­மத்­தில் அவர்­க­ளுக்கு கொடுக்­கப்­ப­டுரம் தின­சரி பணி­கள் மற்­றும் சவால்­களை அவர்­கள் செய்து முடித்­தால்­தான் அங்கு தாக்­குப்­பி­டிக்க முடி­யும். அந்த கிரா­மத்­தின் மக்­கள்­தான் இந்த போட்­டி­யா­ளர்­க­ளுக்கு நடு­வர்­கள்.

முழுக்க முழுக்க பொழு­து­போக்கு நிறைந்த நிகழ்ச்­சி­யாக மட்­டு­மில்­லா­மல், கிரா­மப்­புற வாழ்க்­கையை பற்­றி­யும் மேலும் தெரிந்து கொள்­ள­ள­லாம். அந்த கிரா­மத்து வாழ்க்­கையை அழ­காக கையாண்டு வாழ்ந்து காட்­டும் ஒரு போட்­டி­யா­ளர் 'அழகி'யாக பட்­டம் சூட்­டப்­ப­டு­வார்.