மூன்று மத விழாக்­கள்!

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018

வேந்­தர் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கும் உட­னடி ஆன்­மிக நிகழ்ச்சி 'ஆன்­மிக நிகழ்­வு­கள்.'

நாடெங்­கும் நடக்­கும் ஆலய நிகழ்ச்­சி­கள் மற்­றும் விழாக்­களை அன்­றன்றே கொடுக்­கும் நிகழ்ச்­சி­யாக இது ஒளி­ப­ரப்­பா­கிக் கொண்­டி­ருக்­கி­றது. இதில் இந்து ஆல­யங்­க­ளில் நடக்­கும் விசேஷ ஆரா­த­னை­கள், தின­சரி விழாக்­கள், கும்­பா­பி­ஷே­கம்  போன்­ற­வற்றை அன்­றன்றே பார்க்­கும் வித­மாக தொகுத்து வழங்கி வரு­கி­றார்­கள். மேலும், கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளில் நடை­பெ­றும் ஆரா­த­னை­கள் மற்­றும் பிரார்த்­த­னை­க­ளோடு இஸ்­லா­மிய மசூ­தி­க­ளில் நடை­பெ­றும் வழி­பா­டு­கள் மற்­றும் தொழு­கை­க­ளும் இடம்­பெ­று­கின்­றன.

தமிழ்­நாட்­டில் தின­மும் நடை­பெ­றும் மூன்று மத விழாக்­களை அனை­வ­ரும் கண்டு அருள்­பெற வேண்­டும் என்ற நோக்­கத்­தோடு ஒளி­ப­ரப்­பா­கி­றது.