ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 14–03–18

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018

அபூர்­வ­மான ஸ்வர கோர்வை!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

கல்­யாணி ராகத்­தில் 'பகல் நிலவு' படத்­தில் வரும்  பாடல் ”வைதேகி ராமன் கைசே­ரும் காலம்”.. படம் வெளி­யான ஆண்டு, 1985. படத்தை இயக்­கி­ய­வர், மணி­ரத்­னம். அவரை ஒரு நல்ல டைரக்­டர் என இனம் காண்­பித்த படம் இது.

காட்­சி­படி சரத்­பாபு ராதி­கா­வி­டம் சலங்­கை­யைக் காட்டி ''இது சலங்கை அல்ல; இதுவே மாங்­கல்­யம்'' என்­கி­றார். அதைக் காலில் கட்­டிக் கொண்டு ராதிகா நட­ன­மா­டு­கி­றார். ஒரு அபி­ந­யத்­து­டன் கூடிய பாட­லாக இது மலர்­கி­றது. இசை­ய­மைத்­த­வர்,  இளை­ய­ராஜா. பாட­லைப் பாடி­ய­வர், எஸ். ஜானகி. பாடலை இயற்­றி­ய­வர், கங்கை அம­ரன். நல்ல கூட்­ட­ணி­தானே இது!

பாடல் இது­தான்:-

வைதேகி ராமன் கைசே­ரும் காலம்

தை மாத நன் னாளிலே     வையம் வான­கம் யாவும் தோர­ணம்

மெய்யை மெய் தொடும் காதல் கார­ணம்

வைதேகி ராமன் கைசே­ரும் காலம்

தை மாத நன் னாளிலே    ஆ..ஆ..

இளை­ய­ராஜா கல்­யாணி ராகத்­தில் பல பாடல்­களை அமைத்­தி­ருக்­கின்­றார். 'உதி­ரிப்­பூக்­கள்' படத்­தில் வரும்  ”நான் பாட வரு­வாய்”… என்ற பாடல்­தான் அவர் முதன் முத­லில் கல்­யாணி ராகத்­தில் இசை­ய­மைத்த பாடல் என்று நினைக்­கின்­றேன். பாட­லின் தொடக்­கத்­தில் வரும் வய­லின் இசை அதை தொடர்ந்து வரும் ராக ஆலா­பனை. சிறிது பக­டி­யு­டன் ஜானகி  அந்த ஆலா­ப­னை­யினை நிகழ்த்­தி­யி­ருப்­பார். பல்­ல­வி­யி­லேயே ஒரு மத்­யம கால சாஹித்­யம் மிக அழ­காக அமைக்­கப்­பட்­டி­ருக்­கும். மத்­யம காலம் என்­பது சாதா­ரண வேகத்­தில் அமைக்­கப்­பட்ட வரி­களை ஒட்டி அதே தாள அள­வில் ஆனால் சற்று விரை­வாக இசைக்­கப்­ப­டும் அமைப்­பா­கும்.

முதல் சர­ணத்­திற்கு முன் வரும் interlude  இசை வய­லி­னில் மிக அழ­காக  ஸ்வரப்­பி­ர­யோ­கங்­கள் அமைக்­கப்­பட்டு, 'ச', 'ப' என்ற ஸ்வரங்­களை தொடா­மல் தாரஸ்­தாயி மத்­ய­மம்  வரை சென்று, பின்­னர் 'ச',' ப' ஸ்வரங்­களை தொட்டு இரட்டை ஸ்வரங்­க­ளாக இசைக்­கப்­ப­டும் இடம் அபா­ர­மா­னது. அதைத் தொடர்ந்து 'ஸக, ஸகப, கப, கபஸ,'  என்ற ஒரு அபூர்­வ­மான ஒரு ஸ்வரக் கோர்வை அமைக்­கப்­பட்­டி­ருக்­கும்.

'கதி­ரொளி விளை­யாட' என்ற முதல் சர­ணத்­தில் மூன்­றாம் வரி­யில் 'ஸ்வரம் ஏழும்' என்ற வரி­யில் உச்­சஸ்­தா­யி­யில் செல்­லும் பொழுது ஒரு பக­டி­யு­டன் அதைப் பாடி­யி­ருப்­பார். அந்த பாடல் காட்­சியே காண்­ப­தற்கு  மிகுந்த நகைச்­சு­வை­யாக இருக்­கும். பாடிக்­கொண்டே இருக்­கும் பொழுது தண்­ணீர் குடம் ஆற்­றோடு சென்று விடும். அதை ஒரு சிறு­வன் பாய்ந்து எடுப்­பான். அப்­போது அங்கு அவர் சொல்­லும் சபாஷ், இசைக்­கும் அந்த சிறு­வ­னுக்­கும்… அரு­மை­யாக பட­மாக்­கப்­பட்ட பாடல் அது. அதே போன்று ஆடு, மாடு­களை ரசி­கர்­க­ளாக பாவித்து பாடு­வ­தாக அமைந்­தி­ருக்­கும்.

இரண்­டாம் சர­ணத்­தின் இடை இசை­யில் வரும் குர­லி­சை­யில் அபூர்வ பிர­யோ­கங்­க­ளைக் காண­லாம். இது மேற்­கத்­திய இசை­ய­மைப்­பில் வரு­வது போல் அமைக்­கப்­பட்­டி­ருக்­கும். அது முடிந்­த­வு­டன் 'பம­க­மப' என்ற ஸ்வர அமைப்பை மீண்­டும் ஒரு கிண்­டல் தொனி­யில் பாடி­யி­ருப்­பார். இரண்­டாம் சர­ணத்­தில் கல்­யாணி ராகத்­தின் அனைத்து அழ­கை­யும் காண்­பித்­தி­ருப்­பார் 'உதிரிப்பூக்­கள்'  படத்­தின் இயக்­கு­னர் மகேந்­தி­ரன். வாய்ப்­பி­ருந்­தால் அப்­பா­ட­லின் வீடி­யோவை பாருங்­கள்.