சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 335 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018

ரஜி­னி­காந்த், ஸ்ரேயா சரண், விவேக், சுமன், மணி­வண்­ணன், வடி­வுக்­க­ரசி, கொச்­சின் ஹனிபா, சால­மன் பாப்­பையா, பட்­டி­மன்­றம் ராஜா, சண்­மு­க­ரா­ஜன், பிர­மிட் நட­ரா­ஜன், எம்.எஸ்.பாஸ்­கர், லிவிங்ஸ்­டன், உமா பத்­ம­நா­பன், போஸ் வெங்­கட், வாசு வெங்­கட் மற்­றும் பலர்  நடித்­தி­ருந்­தார்­கள்.

இசை: ஏ.ஆர். ரஹ்­மான், ஒளிப்­ப­திவு: கே.வி. ஆனந்த், எடிட்­டிங்: ஆண்­டனி, வச­னம்: சுஜாதா.

'சிவாஜி' படம் பற்றி பார்ப்­போம்…

சிவாஜி (ரஜி­னி­காந்த்) அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து திரும்­பும் மென்­பொ­ருள் வடி­வ­மைப்­பா­ளர். அவ­ரது லட்­சி­யம் ஏழை மக்­க­ளுக்­காக லாப நோக்­க­மில்­லாத கல்வி நிலை­யங்­க­ளை­யும், மருத்­து­வ­ம­னை­க­ளை­யும் உரு­வாக்­கு­வது. அதற்­காக 'சிவாஜி பவுண்­டே­ஷன்' என்ற பெய­ரில் டிரஸ்ட் தொடங்­கு­கி­றார். ஆனால் அவ­ரது நோக்­கத்தை லஞ்­சம் வாங்­கும் அதி­கா­ரி­க­ளும், கல்வி நிலை­யங்­கள், மருத்­து­வ­ம­னை­க­ளின் அதி­ப­ரு­மான ஆதி­சே­ஷ­னும் விரும்­ப­வில்லை. தனது சிவாஜி பவுண்­டே­ஷனை தொடங்­கு­வ­தற்கு அர­சின் அத்­தனை நிலை­யில் இருப்­ப­வர்­க­ளுக்­கும் அவர்­கள் கேட்­கும் தொகையை லஞ்­ச­மாக தரு­கி­றார். ஊழல் அதி­கா­ரி­க­ளுக்கு கொடுப்­ப­தற்­காக தனது வீடு, கார் ஆகி­ய­வற்­றை­யும் இழக்­கி­றார். ஆதி­சே­ஷ­னால் தொட­ரப்­பட்ட வழக்­கில் முறை­யற்ற வகை­யில் டிரஸ்ட் தொடங்­கி­ய­தாக கூறி சிவாஜி தோற்­க­டிக்­கப்­ப­டு­கி­றார். இதற்­கி­டை­யில் சிவாஜி தான் விரும்­பிய தமிழ்­செல்­வியை (ஸ்ரேயா சரண்) மண­மு­டிக்க விரும்­பு­கி­றார். ஜோசி­ய­ரின் கூற்­றுப்­படி இரு­வ­ரும் இணைந்­தால் சிவாஜி இறந்­து­வி­டு­வார் என்­ப­தால் தமிழ்­செல்வி திரு­ம­ணத்­திற்கு மறுக்­கி­றார். அவரை சமா­தா­னப்­ப­டுத்­தும் சிவாஜி திரு­ம­ணத்­திற்கு சம்­ம­திக்க வைக்­கி­றார்.

வழக்­கில் தோல்­வி­ய­டைந்த சிவா­ஜியை சந்­திக்­கும் தமிழ்­செல்வி தன்னை இனி சந்­திக்க வேண்­டா­மென கூறு­கி­றார். சிவா­ஜி­யின் பொரு­ளா­தார நிலைமை மிக மோச­மாக மாறு­கி­றது. தான் பின்­பற்­றிய வழி­மு­றை­கள் தவறு என  உணர்ந்து கொள்­ளும் சிவாஜி, தனது பாணி­யில் புதிய திட்­ட­மொன்றை தீட்­டு­கி­றார். தனது மாமா அறிவு (விவேக்) துணை­யு­டன் ஆதி­சே­ஷன் மறைத்து வைத்­தி­ருந்த இரண்டு பில்­லி­யன் பணத்தை கைப்­பற்­றும் சிவாஜி,   ஆதா­ரங்­களை வைத்து மிரட்டி ஆதி­சே­ஷ­னி­ட­மி­ருந்து பாதி பணத்தை பெறு­கி­றார். இதைப்­போ­லவே சட்­டத்­திற்கு புறம்­பாக பணம் சேர்த்து வைத்­தி­ருப்­ப­வர்­களை மிரட்டி பாதி பணத்தை வாங்­கு­கி­றார். இந்த பணத்­தை­யெல்­லாம் உல­கெங்­கும் உள்ள தனது நண்­பர்­கள் மூல­மாக சிவாஜி பவுண்­டே­ஷ­னின் நிதி உத­வி­யாக மாற்­று­கி­றார்.

தன்­னி­டம் உள்ள ஆதா­ரங்­கள் மூல­மாக ஆதி­சே­ஷன் மற்­றும் பிற ஊழல்­வா­தி­களை வரு­மான வரித்­து­றை­யி­டம் மாட்­டி­விட்டு அவர்­களை கைது செய்ய வைக்­கி­றார். ஆதி­சே­ஷ­னின் தலை­மை­யில் கூடும் தீய­வர்­கள் தமிழ்­செல்­வி­யின் அறி­யா­மையை வைத்து சிவா­ஜியை மடக்க நினைக்­கி­றார்­கள். சிவா­ஜி­யின் உயி­ருக்கு ஆபத்து என்­ற­தும் தமிழ்­செல்வி சிவா­ஜி­யின் லாப்­டாப்பை சிபிஐ அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கி­றார். அனை­வ­ரை­யும் பணத்­தால் வாங்­கி­யி­ருக்­கும் ஆதி­சே­ஷன், கைதாகி வரும் சிவா­ஜி­யி­டம் லாப்­டாப்பை திறக்­கச்­சொல்லி வற்­பு­றுத்­து­கி­றான். மறுக்­கும் சிவாஜி பல­மாக தாக்­கப்­பட்டு இறந்து விடு­கி­றான். கொலைப்­ப­ழியை வேறு நபர்­கள் மேல் போடு­வ­தற்­காக சிவா­ஜி­யின் உடலை கொண்டு போகும் வேன் மீது துப்­பாக்கி சூடு நடத்­தப்­ப­டு­கி­றது.

உண்­மை­யில் கரு­ணை­யுள்ள ஒரு கான்ஸ்­ட­பி­ளின் தக­வ­லால் தனது உயிரை காப்­பாற்­றிக்­கொள்ள தானே மின்­சார தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­றார் சிவாஜி. சிவா­ஜி­யின் எம்.எம்.எஸ். தக­வல் மூலம் உண்மை அறிந்து அவ­ரின் மருத்­துவ நண்­பர் செழி­யன் (ரகு­வ­ரன்), அறிவு மற்­றும் தமிழ்­செல்வி ஆகி­யோர் சிவா­ஜியை வேனி­லி­ருந்து மாற்றி அதற்கு பதி­லாக ஒரு டம்­மியை வைத்து விடு­கி­றார்­கள். வேன் தீப்­பற்­றி­ய­தும் சிவாஜி இறந்­து­விட்­ட­தாக அனை­வ­ரும் நம்­பு­கி­றார்­கள். குரல் அடை­யா­ளம் மூலம் லாக் செய்­யப்­பட்டு இருக்­கும் சிவா­ஜி­யின் லாப்­டாப்பை ஏமாற்றி திறக்க முயற்­சித்­த­தால், அதி­லி­ருந்த அனைத்து தக­வல்­க­ளும் அழிந்­து­வி­டு­கின்­றன.

சில நாட்­கள் கழித்து, அனை­வ­ரும் சிவாஜி பவுண்­டே­ஷ­னின் நிலையை எண்ணி குழம்­பிக்­கொண்­டி­ருக்க, அனை­வ­ரும் அதி­ச­யிக்­கும் வகை­யில் அங்கு வரும் சிவா­ஜி­யின் நண்­பர் எம்.ஜி. ரவிச்­சந்­தி­ரன் பவுண்­டே­ஷ­னின் பொறுப்பை ஏற்­கி­றார். எம்.ஜி.ஆர். பெய­ரில் வந்­தி­ருப்­பது சிவா­ஜி­தான் என்­பதை உணர்ந்து கொள்­ளும் ஆதி­சே­ஷ­னால் உண்­மையை நிரூ­பிக்க முடி­ய­வில்லை. விரை­வி­லேயே ஆதி­சே­ஷ­னது உண்­மை­கள் வெளி­வர, இரு­வ­ரும் மருத்­து­வக் கல்­லூ­ரி­யின் மாடி­யில் சண்டை போடு­கி­றார்­கள். அப்­போது கூரை­யில் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருக்­கும் பணம் சித­று­கி­றது. பறந்து வரும் பணத்தை பிடிப்­ப­தற்­காக அனைத்து மாண­வர்­க­ளும் ஓடு­கி­றார்­கள். அவர்­க­ளி­டையே தவறி விழும் ஆதி­சே­ஷன் மாண­வர்­க­ளின் கால்­க­ளுக்­கி­டையே நசுங்கி இறக்­கி­றார். இந்­தி­யா­வின் பொரு­ளா­தார மற்­றும் தொழில்­துறை வளர்ச்­சிக்கு சிவாஜி பவுண்­டே­ஷ­னும் முக்­கிய கார­ண­மா­கி­றது.

ரஜி­னி­யும், ஷங்­க­ரும் இணைந்த இப்­ப­டம் எதிர்­பார்த்­தது போலவே மிகப்­பெ­ரிய வெற்­றியை அடைந்­தது. ஏ.ஆர். ரஹ்­மான் இசை­யில் அனைத்­துப் பாடல்­க­ளும் சூப்­பர் ஹிட். கலை இயக்­கு­னர் தோட்­டா­த­ர­ணி­யால் காட்­சி­கள் கண்ணை கவர்ந்­தன.

ஆதி­சே­ஷன் பாத்­தி­ரத்­தில் நடிப்­ப­தற்­காக அமி­தாப் பச்­சன், பிர­காஷ்­ராஜ், மோகன்­லால் ஆகி­யோ­ரெல்­லாம் ஆலோ­சிக்­கப்­பட்டு சத்­ய­ராஜ் மறுத்த பிறகு இறு­தி­யாக சுமன் நடித்­தார். இந்த பாத்­தி­ரத்­திற்­காக வித்­தி­யா­ச­மான உடை­ய­மைப்பு, மேக்­கப் என கவ­னம் செலுத்­தப்­பட்­டது. பஞ்சு அரு­ணா­ச­லத்­தின் மக­னான சுப்பு பஞ்சு சும­னுக்கு குரல் கொடுத்­தார். ஸ்ரேயா­வுக்கு நடிகை கனிகா பின்­னணி குரல் கொடுத்­தார். ”பல்­லே­லக்கா” பாட­லுக்கு ரஜி­னி­யு­டன் நடிகை நயன்­தாரா நடித்­தி­ருந்­தார்.