ரூ. 189 கோடிக்கான குடிநீர் திட்டங்களை முதல்வர் பழனிசாமி துவக்கினார்

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 11:59

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110ன் கீழ் நொளம்பூர் பகுதியில் கழிவு நீரகற்றும் கட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதற்கிணங்க ரூ. 28.35 கோடிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் 18 கோடி ரூபாய் குடிநீர் வழங்கத் திட்டம் ஆகியவற்றை காணொளிக் காட்சி மூலமாகத் துவக்கிவைத்தார்கள்.

மேலும் ரூ. 143.46 கோடி மதிப்பிலான திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சிமூலம் இன்று துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (13.3.2018) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சென்னை, நொளம்பூரில் 28 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் வழங்கும் திட்டம் ஆகியவற்றை காணொலிக் காட்சி (ஏனைநடி ஊடிகேநசநnஉiபே) மூலமாகத் துவக்கி வைத்தார்கள். மேலும்,  143 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், சமுதாய நலக்கூடம், வகுப்பறைக் கட்டடங்கள், நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், பூங்காக்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்.

அம்மா அவர்கள் கடந்த 16.4.2013 அன்று சட்டமன்றப் பேரவை விதி எண்.110 கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை நகருடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பான நொளம்பூர் பகுதியில் கழிவு நீரகற்றும் கட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள். அதன்படி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் நொளம்பூரில் 28 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் வழங்கும் திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம் சுமார் 28,000 மக்கள் பயன்பெறுவார்கள்.

மொத்தம் 189 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 12 திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 198 பணியாளர்களின் வாரிசுதாரர்கள், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் நகராட்சிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 214 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 61 பணியாளர்களின் வாரிசுதாரர்கள், என மொத்தம் 473 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு  கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், உதவி வரைவாளர், அலுவலக உதவியாளர், வார்டு உதவியாளர், பூங்கா பணியாளர், களப் பணியாளர் போன்ற பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று 16 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை  வழங்கினார்கள்.

48 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள் திறப்பு

மேலும், 9 கோடியே 16 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பால்வள துணை பதிவாளர்  அலுவலகக் கட்டடம், அதிநவீன ஆவின் பாலகங்கள்,  மீன்வளத்துறை கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, 1 கோடியே 51 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கால்நடை பராமரிப்புத் துறை ஒருங்கிணைந்த கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள்.

சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் 38 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறைக்கான ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்கள்.


இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி, ஊரகத் தொழில் துறை அமைச்சர்  பா.பென்ஜமின், மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் தா. கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் சி.என். மகேஸ்வரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் சத்தியபிரத சாகு, நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.