இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் தொடர் பெடரர் உள்ளே ; ஜோகோவிச் வெளியே

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 01:56


இந்­தி­யன்­வெல்ஸ் 

: அமெ­ரிக்­கா­வின் இந்­தி­யன்­வெல்ஸ் டென்­னிஸ் தொட­ரில் ஆண், பெண் நட்­சத்­திர வீரர்­கள் விளை­யா­டிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். நேற்று அதி­ காலை நடை­பெற்ற முக்­கிய ஆட்­டங்­க­ளில் ஆண்­கள் பிரி­வில் நம்­பர் ஒன் வீரர் ரோஜர் பெட­ரர் வெற்றி பெற்று அடுத்த சுற்­றுக்­குள் நுழைந்­தார். மற்­றொரு டென்­னிஸ் பிர­ப­ல­மான நோவக் ஜோகோ­விச் தொட­ரில் இருந்து வெளி­யே­றி­னார்.

* டென்­னிஸ் உல­கின் நம்­பர் ஒன் வீர­ரான சுவிட்­சர்­லாந்து நாட்­டின் ரோஜர்­பெ­ட­ரர், அர்­ஜென்­டி­னா­வின் டெல்­போ­னிசை எதிர்த்து விளை­யா­டி­னார். இதில் பெட­ரர் 6–3, 7–6 என்ற செட்­க­ளில் வெற்றி பெற்­றார்.

* இந்­தி­யா­வின் யூகி பாம்ப்ரி, பிரான்ஸ் நாட்­டின் பவு­லியை எதிர்த்து விளை­யா­டி­னார். இதில் யூகி 6–4, 6–4 என்ற செட்­க­ளில் வெற்­றி­பெற்று அடுத்த செட் ஆட்­டத்­தில் நுழைந்­தார்.

* அமெ­ரிக்­கா­வின் சாம் கியூர்ரே, ஜெர்­மன் நாட்­டின் மிஷ்சா வெர்வை எதிர் கொண்டு விளை­யா­டி­னார். இதில் சாம் 6–4, 7–5 என்ற செட்­க­ளில் வென்­றார்.

*குரோ­ஷி­யா­வின் மாரின் சிலிக், ஹங்­கே­ரி­யின் புக்­சோ­விக்சை 7–5, 6–3 என்ற செட்­க­ளில் வென்­றார்.

* கன­டா­வின் மைலோஸ் ரோனிக், சக நாட்­ட­வ­ரான அகர் அலி­ஆஸ்­மியை  6–4, 6–4 என்ற செட்­க­ளில் வென்­றார்.

* அர்­ஜென்­டி­னா­வின் ஜூவான் டெல்­போர்டோ, ஆஸ்­தி­ரே­லி­யா­வின் டி மினாரை 6–2, 6–1 என்ற செட்­க­ளில் வென்­றார்.

* அமெ­ரிக்­கா­வின் ஜேக் சோக், இத்­தா­லி­யின் பாபி­னோவை 6–2, 7–5 என்ற செட்­க­ளில் வென்­றார்.

* ஜப்­பான் நாட்­டின் டி.டேனி­யல், செர்­பி­யா­வின் டென்­னிஸ் நட்­சத்­தி­ர­மான நோவக் ஜோகோ­விச்சை 7–6, 4–6, 6–1 என்ற செட்­க­ளில் தோற்­க­டித்­தார்.

பெண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் நேற்றை முக்­கிய

ஆட்­டங்­கள்:

* செக் குடி­ய­ர­சின் கரோ­லினா பிளிஸ்­கோவா, சீனா­வின் ஜாங்கை எதிர்த்து விளை­யா­டி­னார். இதில் பிளிஸ்­கோவா 7–5, 5–7 மற்­றும் 6–3 என்ற செட்­க­ளில் வென்­றார்.

*அமெ­ரிக்­கா­வின் ஸ்டீ பென்ஸ், பெல­ரா­சின் அசெ­ரங்­காவை எதிர் கொண்­டார். இதில் 6–1, 7–5 என்ற செட்­க­ளில் ஸ்டீபென்ஸ் வென்­றார்.

* ஜெர்­மன் வீராங்­கைன கெர்­பர், ரஷ்­யா­வின் மக்­க­ரோ­வாவை 6–3, 4–6 மற்­றும் 6–2 என்ற செட்­க­ளில் வென்­றார்.

*குரோ­ஷி­யா­வின் மார்­டிக், லாத்­வி­யா­வின் ஓஸ்­டா­பெங்­கோவை 6–3, 6–3 என்ற செட்­க­ளில் வீழ்த்­தி­னார்.

* ரோமின் ஹாலேப், அமெ­ரிக்­கா­வின் டோல்­ஹைடை 1–6, 7–6, 6–2 என்ற செட்­க­ளில் வீழ்த்­தி­னார்.