ஷமி துபாய்க்கு போனது ஏன்? பிசிசிஐக்கு கோல்கத்தா போலீஸ் கேள்வி

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 01:55


கோல்­கத்தா : 

இந்­திய அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர்­க­ளில் ஒரு­வ­ரான முக­மது ஷமி, தன்னை உடல் ரீதி­யா­க­வும், மன ரீதி­யா­க­வும் கொடு­மைப்­ப­டுத்­தி­ய­தாக அவ­ரது மனைவி ஹசின் ஜஹான் கொல்­கத்தா போலீ­சில் புகார் கொடுத்­துள்­ளார்.

அத்­து­டன், தனக்கு துரோ­கம் செய்­து­விட்டு, தன் பெண் தோழி­க­ளு­டன் ஷமி சுற்­றிக் கொண்­டி­ருப்­ப­தா­க­வும், தட்­டிக் கேட்­ட­தால் தன்னை அடித்து உதைத்­தா­க­வும் ஹசின் தன் புகா­ரில் கூறி­யி­ருந்­தார். இந்­தப் புகா­ரின் அடிப்­ப­டை­யில் ஜாமீ­னில் வெளி­வர முடி­யாத பிரிவு உட்­பட 6 பிரி­வு­க­ளில் ஷமி மீது போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர்.

ஹசின் தன் புகா­ரில், ‘இந்­திய கிரிக்­கெட் அணி தென்­னாப்­பி­ரிக்­கா­வில் சுற்­றுப் பய­ணம் மேற் கொண்­டது. தென்­னாப்­பி­ரிக்­கா­வில் இருந்த இந்­திய வீரர்­கள் அனை­வ­ரும் நாடு திரும்­பி­னர். ஆனால், ஷமி மட்­டும் துபாய் சென்­றி­ருந்­தார். துபா­யில் அவர் இருந்து கொண்டே, பாகிஸ்­தா­னைச் சேர்ந்த தன் பெண் தோழியை அழைத்து, அவ­ரு­டன் தங்­கி­யுள்­ளார்’ என்ற பகீர் குற்­றச்­சாட்­டை ­யும் குறிப்­பிட்டு இருந்­தார்.

ஹசி­னின் இந்­தக் குற்­றச்­சாட்டு குறித்து இப்­போது கொல்­கத்தா போலீ­சார் பிசி­சிஐ அதி­கா­ரி­க­ளி­டம் விசா­ரிக்­கத் தொடங்­கி­யுள்­ள­னர். ‘ஷமி­யு­டன் தங்­கி­யி­ருந்த பாகிஸ்­தான் பெண்­ணின் பெயர் அலி்ஷ்பா. அந்­தப் பெண் ஷமிக்கு பணம் வழங்­கி­யுள்­ளார். அவ­ரி­டம் இருந்து ஷமி எதற்­காக பணம் பெற்­றார் என்­பது எனக்­குத் தெரி­யாது. இது­கு­றித்து ஷமி­யி­டம் நான் கேட்­ட­போது அவர் கார­ணம் சொல்ல மறுத்­து­விட்­டார்.

ஆனால், ஒன்று மட்­டும் உறுதி. ஷமி எனக்கு மட்­டும் துரோ­கம் செய்­ய­வில்லை, நாட்­டுக்­கும் சேர்ந்­து­தான் துரோ­கம் செய்­துள்­ளார். நாட்டை ஏமாற்­றி­யுள்­ளார்’ என்று பேட்­டி­யொன்­றில் ஹசின் தெரி­வித்­துள்­ளார். இத­னால் ஷமி மேட்ச் பிக்­சிங்­கில் ஈடு­பட்­டாரா என்ற சர்ச்­சை­யை­யும் அவர் கொளுத்­திப்­போட்­டுள்­ளார். ஷமி­யின் மீதான குற்­றச்­சாட்­டு­க­ளால் அவ­ருக்கு வழங்­க­வி­ருந்த ஒப்­பந்­தத்தை பிசி­சிஐ நிறுத்தி வைத்­துள்­ளது.

ஷமி மீதான குற்­றச்­சாட்­டு­கள் உறு­தி­யா­னால் அவ­ருக்கு அதி­க­பட்­சம் 10 ஆண்­டு­கள் வரை தண்­டனை கிடைக்­கும் வாய்ப்­புள்­ளது. அதே நேரத்­தில் ஷமி எதற்­காக துபாய் சென்­றார்? இது­கு­றித்து பிசி­சிஐ அதி­கா­ரி­க­ளுக்கு அவர் தக­வல் தெரி­வித்­தாரா? என்ற விசா­ர­ணையை கொல்­கத்தா போலீ­சார் முடுக்­கி­யுள்­ள­னர்.