மேரிகோம் குத்துசண்டை மையத்தை மோடி திறக்கிறார்

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 01:54


இம்­பால் : 

இந்­தி­யா­வின் நட்­சத்­திர குத்­துச்­சண்டை வீராங்­க­னை­யான மேரி­கோம், மணிப்­பூர் தலை­ந­கர் இம்­பா­லில் ‘மேரி­கோம் ரீஜி­னல் பாக்­ஸிங் பவுண்­டே­ஷன்’ என்ற அமைப்­பைத் மார்ச் 16ம் தேதி தொடங்­க­வுள்­ளார். இந்­தக் குத்­துச்­சண்டை மையத்தை பிர­த­மர் மோடி திறந்து வைக்­க­வு்­ள­ளர். இந்­நி­கழ்ச்­சி­யில் ஒலிம்­பிக் பதக்­கம் வென்ற குத்­துச்­சண்டை வீரர்­க­ளான சுஷில்­கு­மார், விஜேந்­தர்­சிங் ஆகி­யோர் கலந்து கொள்­ள­வுள்­ள­னர்.

இம்­பால் நக­ரில் இருந்து 10 கி.மீட்­டர் தூரத்­தில், மூன்­றரை ஏக்­கர் பரப்­ப­ள­வில் இந்த குத்­துச்­சண்டை பயிற்சி மையம் உள்­ளது. இப்­போது மேரி­கோம் பயிற்சி மையத்­தில் 20 இளம் பெண்­கள் உட்­பட 45 குத்­துச்­சண்டை வீரர்­கள் உள்­ள­னர். இவர்­க­ளது பயிற்­சிக்­காக 3 அடுக்கு மாளிகை அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான நிலத்தை கடந்த 2013ம் ஆண்­டில் மணிப்­பூர் மாநில அரசு வழங்­கி­யது குறிப்­பி­டத்­தக்­கது.